ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இசை துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

இசை துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

என் கணித பலன்கள்

என் கணித பலன்கள்

Numerology | இசை துறையில் உள்ளவர்களுக்கான எண் கணித பலன் குறித்து ஒரு பார்வை..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசைத்துறையில் ஈடுபட விரும்புபவர்களும், அதில் சாதிக்க விரும்புபவர்களும் தங்களுடைய பிறந்த தேதியில் 1,2,3,6 மற்றும் 9 ஆகிய எங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டிருக்க வேண்டும்.

எண் 1 சிறந்த வேலை வாய்ப்புகளை குறிக்கிறது. இந்த எண்ணை இவர்கள் கொண்டிருந்தால் இசைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராகவே இருப்பார்கள். மேலும் தங்களுடைய உணர்ச்சிகளை இசையின் மூலமாகவே வெளிப்படுத்தி மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.

எண் 2 ஒருவரின் திறமையின் அளவை குறிக்கிறது. இந்த எண்ணை கொண்டுள்ளவர்கள் நல்ல கற்பனைத் திறன் மிகுந்தவர்களாகவும் ஊக்கமுடன் செயல்படுபவர்கள் ஆகவும் இருப்பார்கள். மேலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள். தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுடைய இசையின் மூலம் மற்றவர்களின் ஆதிக்கம் செலுத்துவதிலும் இவர்கள் சிறந்தவர்கள். மேலும் எந்த வித பேச்சும் இல்லாமல் தங்கள் இசை ஒன்றை வைத்தே உலகத்தாரின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.

எண் 3 கற்பனைத் திறனையும், வித்தியாசமான இசைகளை உண்டாக்குவதையும் குறிக்கிறது. ஒரே மாதிரி இசைத்திறனை கொண்டிருக்காமல் பல விதமான இசைகளையும் இவர்கள் கற்றுக் கொள்வதால், நீண்ட காலம் இசைத்துறையில் நீடித்து இருப்பார்கள். விதம் விதமான இசைகளை கொடுப்பது ஒன்றே இசைத்துறையில் நீடித்து இருப்பதற்கு வேண்டிய முக்கிய திறமை ஆகும். மேலும் புதிய புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான ராகங்களையும், மக்களை கவர்ந்திழுக்க புதிய முயற்சிகளையும் செய்ய துடிப்பார்கள். நிலைத்தன்மை கொண்டவராகவும், தன்னுடைய துறையில் செல்வாக்கு உடையவராகவும் இருப்பார்கள்.

எண் 6 தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கான ஒரு மேடையை அமைத்துக் கொடுக்கும். இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலை இவர்களுக்கு உண்டாகாது. தங்களது திறமையை தன்னை சுற்றியுல்லோருக்கும், வெளி உலகத்திற்கும் காட்டுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

எண் 9 என்பதும் கற்பனை திறனை குறிக்கிறது. மேலும் சிறப்பாக செயல்படுபவராகவும் இரக்க குணம் உடையவராகவும் இருப்பார்கள். பிரபலமாவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், ஒழுக்கமாக இருப்பதற்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும் இந்த எண் காரணமாக இருக்கும். மேலும் தங்களது அறிவையும் அனுபவத்தையும் சரியான வழியில் செயல்படுத்துவார்கள்.

ஒருவேளை மேலே கூறிய எண்கள் உங்கள் பிறந்த தேதியில் இல்லாமல் இருந்து நீங்கள் இசைத்துறையில் ஈடுபட விரும்பினால், முடிந்த அளவு உங்களது செல்போனில் ஆவது இந்த எண் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

அதிர்ஷ்ட தினம்: வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

தானம்: எழுது பொருட்களை ஆசிரமத்திற்கு தானம் அளிக்க வேண்டும். குரு பகவானுக்கோ அல்லது உங்களது குருவிற்கோ பூஜைகள் செய்து வர வேண்டும்.

First published:

Tags: Numerology, Tamil News