ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அரசு சேவை துறைகளில் இருப்பவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

அரசு சேவை துறைகளில் இருப்பவர்களுக்கான எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அரசு சேவை துறைகளில் இருப்பவர்களுக்கான எண் கணித சிறப்பு கட்டுரை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு சேவை துறைகளில் இருப்பவர்களுக்கான எண் கணித பலன்கள்:

அரசு நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் பிறந்த தேதியில் 4, 6 மற்றும் 9 ஆகிய எண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பின் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அரசு உயர் பதவி கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் இலக்கு நோக்கி தீவிரமாக இயங்க வேண்டும். கடின உழைப்பு, ஒழுங்கு மற்றும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்கான மன உறுதி ஆகியவை அவசியமாகும்.

இந்த தகுதிகள் அனைத்தையும் வழங்குவதாக எண் 4 அமையும். திட்டமிடலுக்கான எண்ணும் 4 தான். ஆகவே, 4ஆம் எண் இருந்தும் முறையான திட்டமிடல் இல்லை என்றால் உங்களால் வெற்றி காண இயலாது. ஒரு நபரின் பணி சார்ந்த மேலாண்மை திறன், ஒழுங்கு, சீரான தன்மை போன்றவற்றை உருவாக்குவதாகா எண் 4 அமையும். உயர் பொறுப்புகளை கொண்டிருப்பதற்கும் எண் 4 உகந்தது ஆகும்.

இந்த எண் கொண்டிருக்கும் நபர்களுக்கு, பிறரிடம் இருந்து எப்படி வேலை வாங்குவது என்ற சூட்சமம் தெரியும். ஆகவே, இவர்கள் மாபெரும் சூத்திரதாரியாக இருப்பார்கள். இயல்பான யோசனை கொண்டவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பின் மூலமாக இலக்கை அடைவது எப்படி என்று இவர்களுக்கு தெரியும்.

அதேபோல பிறந்த தேதியில் எண் 6 கொண்டிருப்பவர்களுக்கு இலக்கை அடைவதற்கான பொறுப்புடைமை, மன உறுதி ஆகியவை இருக்கும். இவர்களுக்கான வாய்ப்புகள் பெருகும். உங்கள் திறன்களை நிரூபிப்பதற்கான தங்கவாயிலை திறக்கும் வகையில் இந்த எண் அமையும்.

எண் 9 சமூகத்தில் புகழ் தரும். எதையும் கவனம் எடுத்து செய்பவராக, வலுவானவராக மாற்றும். மன ரீதியாக எச்சரிக்கை உடையவராகவும், அறிவு மிகுந்தவராகவும் இருப்பார்கள். ஒரு நபரின் அறிவை சரியான திசையை இது வழிநடத்தும். தொழில் முறையில் வெற்றி அடைவார்கள்.

அரசு பதவியில் இடம்பெற விரும்புபவர்கள் அல்லது அரசின் ஒரு அங்கமாக இடம்பெற நினைப்பவர்களின் பிறந்த தினத்தில் இந்த எண்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த எண்களை உங்கள் மொபைல் எண்ணில் பெற முயற்சிக்கவும். அப்போதுதான் கிரகங்களின் ஆற்றல் முழுமையாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் கருப்பு

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி வழங்கவும்.

அலுவலக மேஜையில் படிகார கல் வைக்கவும்.

First published:

Tags: Numerology, Tamil News