ஒருவர் மருத்துவராகவோ அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையிலோ ஈடுபட விரும்பினால் அவர்களின் பிறந்த தேதியில் 4, 6 மற்றும் 7 என்ற எண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.
எண் 4 என்பது ஒரு செயலை செய்து முடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சியினை குறிக்கிறது. மேலும் இலக்கை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அதில் வரும் தடைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தையும் எண் 4 குறிக்கிறது. டெக்னிக்கலான சில விஷயங்களில் இவர்கள் சிறந்தவராக இருப்பார்கள். இந்த எண்ணை உடையவர்கள் உற்சாகமான மனநிலையை கொண்டவராகவும், தன்னுடைய துறையில் எப்போதும் சிறந்து விளங்கும் ஒரு நபராகவும் இருப்பார்கள்.
வேலை என்று வந்துவிட்டால் மிகவும் பொறுப்பாக செயல்படுவார்கள். இந்த தகுதியானது மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தகுதி ஆகும். ஒரு மருத்துவர் உற்சாகமாகவும் நாள் முழுவதும் வேலை செய்யக் கூடியவராகவும் மட்டுமல்லாமல் ஒருவரின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் இருக்கிறது அதனால் இந்த பொறுப்புணர்ச்சி மருத்துவத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் முக்கியம்.
எண் 6 என்பது பொறுப்புணர்ச்சியையும், குணப்படுத்தும் தன்மை மற்றும் வெற்றியை அடைவதற்கான குறிக்கோள் ஆகியவற்றை குறிக்கிறது. மருத்துவர்கள் வியாதியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு மனதளவில் தன்னம்பிக்கை அளித்து ஒரு ஆலோசகராகவும் செயல்பட வேண்டும். நோயாளிகளுக்கு தான் பாதுகாப்பான ஒருவரின் சிகிச்சையின் கீழ் இருக்கிறோம் என்றும், தங்கள் உடல் நிலையைப் பற்றி கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும் இது உதவும். மேலே சொன்ன இந்த தகுதிகள் அனைத்தும் தன்னுடைய பிறந்த தேதியில் என் 6 ஐ உடையவருக்கு கண்டிப்பாக இருக்கும்.
எண் 7 தனது பிறந்த தேதியில் மறைமுகமாகவோ நேரடியாகவோ உடையவர்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள். இந்த எண் அதிர்ஷ்டத்துக்குரிய எண்ணாக மட்டுமல்லாமல் புதுவித கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கும் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் புதிய வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கும் காரணமாக இருக்கும். இந்த தேதியில் பிறந்த மருத்துவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டும் புதிய திறமைகளை கற்றுக்கொண்டும் இருப்பார்கள். இந்த எண் அறிவியல் படிப்புகளுக்கும் மருத்துவத்திற்கும் ஆதாரமாக இருப்பதால் இந்த எண்ணை உடைய நபர்கள் மிகவும் வெற்றிகரமான மருத்துவர்களாக திகழ்வார்கள்.
ஒருவேளை மருத்துவராக இருப்பவர் அறுவை சிகிச்சை நிபுணராக தன்னை மெருகேற்றிக் கொள்ள விரும்பினால் கண்டிப்பாக அவரது பிறந்த தேதியில் எண் 8 இருக்க வேண்டும். நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களது பிறந்த தேதியில் எண் 8 இல்லை என்றால் முடிந்த அளவு தங்களது மொபைல் எண்ணிலாவது இதை அவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டத்துக்குரிய நிறங்கள்: நீலம் மற்றும் பச்சை
அதிஷ்டமான எண்: 6 மற்றும் 7
தானம்: ஏழைகள் மற்றும் கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் அளிக்க வேண்டும்.
சுற்றியுள்ள பகுதிகளில் பசுமையான தாவரங்களை வளர்த்து தினந்தோறும் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பேணி காத்து வரவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News