ஆண்டின் இரண்டாவது மாதமாக வருகின்ற பிப்ரவரி மாதம் என்பது அன்பு, ஒத்துழைப்பு, கருணை, வெகுளியான குணம் போன்றவற்றை உடையதாகும். இந்த 2023ஆம் ஆண்டின் எண்களை மொத்தமாக கூட்டினால் 7 வருகிறது. இது பிப்ரவரியை குறிக்கும் 2க்கு உகந்ததாக உள்ளது.
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இந்த மாதத்தில் எந்தவொரு இலக்கையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற சுய ஊக்கம் கொண்டதாக அமையும். கற்பனையான சிந்தனைகளுக்கு முற்றிலுமாக இடம் கிடையாது. ஆகவே, எதார்த்த சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. அதே சமயம், இந்த மாதத்தை பொருத்தவரையில் நீங்கள் அதிர்ஷ்டத்தை பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக கடின உழைப்பை மேற்கொண்டால் அதன் பலன்கள் மிகுதியாக இருக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - பீச் மற்றும் க்ரீம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - கோவிலில் சந்தனம் கொடுக்கவும்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பிரச்சினைகளுக்கு தீர்வு காண உகந்த மாதமாக பிப்ரவரி இருக்கும். பிப்ரவரி மாதத்தில் தொழில்முறை மற்றும் நிதிப் பலன்கள் கூடுதலாக கிடைக்கும். உங்கள் மனதை காதல் உணர்வுகள் ஆக்கிரமிக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். உங்களுக்கான வாழ்க்கை துணை இந்த மாதத்தில் அமைய வாய்ப்பு உண்டு. திருமணமான தம்பதியர்களின் வாழ்வில் சாதகமான சூழல் உண்டாகும். எனினும், சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற நாளாகும்.
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்பு தானம் செய்யவும்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பேச்சு, எழுத்து, நடிப்பு போன்றவற்றின் மூலமாக உங்கள் எண்ணங்களை பிறருக்கு தெரியப்படுத்த வேண்டுகின்ற மாதம் இது. உணர்வுப்பூர்வமான அனுபவத்தின் மூலம் புதியவற்றை கற்றுக் கொள்வீர்கள். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமான அனுபவத்தை தரும். இந்த மாதம் நல்ல நேரம் கொண்டதாக இருந்தாலும் உங்கள் உடல் நலன் குறித்து அக்கறை செலுத்தவும். புதிய தொடர்புகளை கட்டமைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொறுமையாக இருந்தால் இணக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - விலங்குகளுக்கு வாழைப்பழம் சாப்பிடக் கொடுக்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
சின்ன, சின்ன இலக்குகளை நிர்ணயம் செய்து பெரும் வெற்றிகளை பெறுவதற்கான மாதம் இது. பணியிடத்தில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை பார்த்து சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் நேர்மையை விரும்பும் தேசபக்தி கொண்ட நபர். ஆகவே பாதுகாப்புத் துறை, பொது சேவை, மருத்துவம், நலச்சங்கங்கள் போன்றவற்றில் சேவை செய்வோருக்கு பாராட்டு கிடைக்கும். ராகு தோஷம் கழிக்க விலங்குகளுக்கு உணவளிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரர்களுக்கு உப்பு சேர்த்த உணவளிக்கவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தொழில்களில் பார்ட்னர்ஷிப் அமைக்கும்போது கவனமுடன் இருக்கவும். குறிப்பாக உறவினர்களுடன் கூட்டு சேரும்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வு தேவை. வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்கவும். மாதத்தின் முன் பாதியில் சவால் நிறைந்த காரியங்களை செய்ய வேண்டாம். உங்கள் அலுவலக மேஜையில் மூங்கில் செடி வைக்க வேண்டும். வணிகம் தொடர்புடைய பயணங்கள் வெற்றிகரமாக அமையும். விநாயகருக்கு புதன்கிழமைகளில் அருகம்புல் வைத்து படைக்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - கால்நடைகளுக்கு பால் வைக்கவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
குடும்பத்தினர் ஒன்றிணையும் விழா, பெரும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், சமூக அரசியல் கூட்டங்கள், ஆன்மிக நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கேற்பது நல்ல பலனை தரும். காதல் உறவுகளில் பந்தத்தை மேம்படுத்த கூடுதல் நேரம் செலவழிக்கவும். அழகுசாதனப் பொருள் துறையில் இருப்பவர்கள் மார்க்கெடிங் செய்ய கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள், மாணவர்கள், கால்நடை விவசாயிகள், பத்திரிகையாளர்கள் பிப்ரவரி மாதத்தில் இலக்குகளை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு ஸ்டீல் பாத்திரம் தானம் செய்யவும்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வணிகத்தில் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை மேம்படுத்த அலுவலக மேஜையில் கிறிஸ்டல் தாமரை ஒன்றை வைக்கவும். வழக்கறிஞர்கள், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் போன்றோர் திரளான கூட்டத்தில் பங்கேற்கலாம் அல்லது நேர்காணல்களில் பங்கேற்கலாம். பிறருக்கு மரியாதை கொடுக்க மறக்காதீர்கள். இல்லை என்றால் தவறான புரிதல் அதிகரித்துவிடும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு பணப்பலன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - குழந்தைகளுக்கு ஆடைகளை வழங்கவும்.
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தொழில்முறை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் அதிரடியான முடிவுகளை செயல்படுத்துவீர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள், உற்பத்தியாளர்கள், பொறியாளர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் போன்றோருக்கு பணப்பலன்களை பெருக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிடவும். ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளவும். சொத்துக்களில் நீங்கள் செய்துள்ள முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் க்ரே
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5 மற்றும் 6
தானம் - கால்நடைகளுக்கு காய்கறிகளை வைக்கவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க உடல் ரீதியிலான பயிற்சிகள் சிலவற்றை செய்யவும். கிளாமர் மற்றும் டிசைனிங் துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி மற்றும் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்க உள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு உகந்த மாதம் இது. காதலில் இருக்கும் ஜோடிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் குறுகிய பயணம் மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 2
தானம் - ஆசிரமங்களில் எழுது பொருட்களை தானம் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News