#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பாதகமான சூழ்நிலைகள் வந்தாலும் நீங்கள் அதை எளிதாக சமாளிப்பீர்கள். இன்று நீங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமல் உணர்ந்தாலும், வெற்றியை அடைய சூரிய பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற மட்டும் மறக்காதீர்கள். இன்று உங்கள் காதலில் கவனம் செலுத்துவதை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்துங்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு வருவார்கள். பணியிடத்தில் செயற்கை சூரியகாந்தி மலர்களை வைத்தால் நல்லது.
உகந்த நிறங்கள்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறுக் கிழமை
அதிர்ஷ்ட எண்: 1
நன்கொடைகள் : ஏழைகளுக்கு மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெயை தானம் செய்வது நல்லது.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மற்றவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஒரு போதும் அனுமதிக்காதீர்கள், அது நிரந்தர மன உளைச்சல் பிரச்சனைக்கு வழிவகுக்க நேரிடலாம். முதலீட்டின் மீதான வருமானம் சராசரியாகத்தான் இருக்கும், எனவே உங்கள் வீடு அல்லது வணிகச் சொத்துக் கணக்குகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். மின்னணுவியல், தானியங்கள், நகைகள், இரசாயனங்கள், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் பணியில் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல ஆதாயம் காத்திருக்கிறது.
உகந்த நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் : திங்கள் கிழமை
அதிர்ஷ்ட எண் : 2
நன்கொடைகள்: யாசகர்களுக்கு இன்று பால் தானம் செய்தல் மூலம் நன்மை பெறலாம்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் ஆளுமைத்திறன் இன்று உங்களின் சக ஊழியர்கள், முதலாளி மற்றும் பங்குதாரரைக் கவர்ந்து இழுக்கும். நீங்கள் திட்டமிட்டவை சரியான நேரத்தில் எளிதில் நிறைவேறக் கூடும். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்கி தேர்வை எழுதத் தொடங்கலாம். அதேபோல் நேர்காணலில் கலந்து கொள்பவர்களும் முன்னதாக குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வியாழன் கிரகத்தின் அனுகிரகத்தைப் பெற மஞ்சள் நிற உணவை சமைத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிமாறலாம்.
உகந்த நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் : வியாழக் கிழமை
அதிர்ஷ்ட எண் : 3, 1
நன்கொடைகள் : ஏழைகளுக்கு பருப்புகளை தானம் செய்தல் நல்லது
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் பேச்சுத்திறனால் உங்கள் இலக்குகளை எட்டக்கூடிய மிகச் சரியான நாள். சட்ட வழக்குகளை கையாளும் போது மற்றவர்களின் ஆலோசனையை பெறுவதை கவனமாக கையாளுங்கள். உங்கள் மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு முடிவெடுங்கள். உங்களுடைய தனிப்பட்ட உறவுகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் உணர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தும் நாள். உடற்பயிற்சியில் சிறிது நேரம் கவனம் செலுத்துவது நல்லது.
உகந்த நிறங்கள்: நீலம் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் : செவ்வாய் கிழமை
அதிர்ஷ்ட எண் : 9
நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு தேவைப்படும் பராமரிப்பு பொருட்களை தானம் செய்வது
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்திற்கு செல்லலாம். விற்பனைத் துறையில் இருப்போருக்கு புதிய பதவி கிடைக்கும். மேலும் புதிய ஒப்பந்தங்கள் அல்லது தலைமைத்துவத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எதிர் பாலினத்தவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள், ஏனெனில் அவர்கள் உங்களை மன ரீதியாக ஏமாற்றலாம். நேர்காணல் போன்றவற்றை இன்று மேற்கொள்வது நல்லது. இன்று பச்சை நிற ஆடை அணிவது ஆளுமை நிறைந்த சந்திப்புக்களுக்கு வழிவகுக்கும். பார்ட்டிகளுக்கு செல்வோர் அசைவ உணவுகளை தவிப்பது நல்லது. சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
உகந்த நிறங்கள் : பச்சை கலந்த நீலம் (டீல்)
அதிர்ஷ்டமான நாள் : புதன் கிழமை
அதிர்ஷ்ட எண் : 5
நன்கொடைகள்: முதியோர் இல்லங்களுக்கு மரக்கன்றுகளை வழங்குதல்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் நட்பு வட்டாரம் அல்லது வேலையாட்கள் போன்றவர்கள் விசுவாசமற்ற செயல்களில் ஈடுபடலாம், எனவே அதுபோன்ற நபர்களிடம் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்கள் மற்றும் காதல் துணையை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. துணையுடன் நேரத்தை செலவிடவும், அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்கவும் அல்லது சிறு பயணத்தை மேற்கொள்ள திட்டமிடும் நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
உகந்த நிறங்கள் : அக்வா மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் : வெள்ளிக் கிழமை
அதிர்ஷ்ட எண் : 6
நன்கொடைகள் : பெண்களுக்கு வளையல் தானம் செய்வது
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
சூரிய சக்தி, நகைகள், வாஸ்து, மருந்துகள், மென்பொருள், நடிப்பு, அரசியல், உணவு, உலோகம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக லாபத்துடன் லாபம் ஈட்டுவார்கள். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும்போது புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும் அவர்களின் ஆலோசனைகளை பெறுவது நல்லது. வேலை செய்யும் முதலாளியின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். மென்பொருள், பாதுகாப்பு, தங்கம், பெட்ரோல், மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக அமையும். திருமண திட்டங்களை பற்றி கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் செல்வது நல்ல பலன்களை தரும்.
உகந்த நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் : திங்கள்
அதிர்ஷ்ட எண் : 7
நன்கொடைகள் : கோவிலில் மஞ்சள் துணியை தானம் செய்வது நல்லது
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் பதவி மற்றும் பண பலத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பலருக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள், ஆனால் கடினத்தன்மையுடன் ஒரு போதும் இருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செல்வாக்கு மிக்க நபர்களின் பண பலத்தை பயன்படுத்தி உங்கள் சட்ட வழக்குகளை தீர்க்க முயற்சிப்பீர்கள். படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் தங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் நாள். விளையாட்டு வீரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர். பயணத் திட்டங்களைத் நள்ளிப் போடுவது நல்லது. தான தர்மங்களை செய்வதன் மூலம் புண்ணியம் பெறலாம்.
உகந்த நிறம்: கடற் பச்சை
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: ஏழைகளுக்கு சமையல் எண்ணெயை தானம் செய்வது நன்மை பயக்கும்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் வேலையில் முன்னேற்றப் பாதையில் செல்ல அதிகரிக்க உயரதிகாரிகளுடன் நன்மதிப்பை பெறக் கூடிய நாள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், தன்னலமற்றதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் வணிக ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். அரசுத்துறை, கற்பித்தல் துறை , மாடலிங் துறை, மென்பொருள், அமானுஷ்ய அறிவியல், இசைத் துறை, ஊடகத்துறை அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் பிரபலமடைவீர்கள். இளைஞர்களுக்கு இன்று புதிய பதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் என்ன செய்தாலும் அது சரியான முடிவாக இருக்கும். எனவே நேர்காணல்கள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த நாளைப் பயன்படுத்தலாம். விளையாட்டு வீரர்களின் பெற்றோர் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள். பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.
உகந்த நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்க் கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: வீட்டில் வேலை செய்யும் வேலையார்கள் அல்லது உதவியாளருக்கு சிவப்பு நிற துணியை நன்கொடையாக வழங்குவது நல்லது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News