ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் | 4 ஆம் எண் ஆதிக்கம் தரும் தடைகள் மற்றும் வெற்றிகள்.!

எண் கணித ஜோதிடம் | 4 ஆம் எண் ஆதிக்கம் தரும் தடைகள் மற்றும் வெற்றிகள்.!

எண் கணித ஜோதிடம் 4

எண் கணித ஜோதிடம் 4

Numerology 4 Personality | நான்காம் என்பது நிழல் கிரகமான ராகுவை குறிக்கிறது. மனித உடலும் பாம்பின் தலையும் கொண்டிருக்கும் கிரகம் தான் ராகு. 4, 13 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் கொண்டவர்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

எண் கணித ஜோதிடத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு காரகம், அதாவது குணநலன்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு எண்ணுடன் சம்மந்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நான்காம் என்பது நிழல் கிரகமான ராகுவை குறிக்கிறது. மனித உடலும் பாம்பின் தலையும் கொண்டிருக்கும் கிரகம் தான் ராகு. 4, 13 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் கொண்டவர்கள்.

வேத ஜோதிடத்தில் ராகு என்பது, நல்லதாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி, தான் இருக்குமிடத்தை பெரிய அளவிற்கு பிரம்மாண்டமாக்கும். அது மட்டுமில்லாமல் ஜாதகத்தில் ராகு இருக்கும் ராசி மற்றும் எந்த வீட்டில் இருக்கிறதோ அதனுடைய காரகங்களைப் பெரிதுபடுத்தும். உடன் இருக்கும் கிரகத்தின் தன்மையை பிரதிபலிக்கும். எண்கணித ஜோதிடத்தில் ராகுவை பொறுத்தவரை மிகப்பெரிய தடைகளும் தாமதங்களும், அதே அளவுக்கு வெற்றியும் கிடைக்கும். இதை பற்றி முழுதாக இங்கே பார்க்கலாம்.

கடின உழைப்பு மட்டுமே வெற்றி தரும்

எண் 4 என்பது ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். எனவே ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இவர்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு இருந்தால் மட்டும் தான் இவர்களால் வெற்றி பெற முடியும். ராகு குறுக்கு வழியில் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் குறுக்கு வழியில் அல்லது தவறான பாதைக்கு சென்றால் அதற்குரிய பலன்களை விரைவிலேயே அனுபவித்து விடுவார்கள்.

நீங்கள் ₹100 சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் அந்த ₹100 சம்பாதிப்பதற்காக உழைக்க வேண்டும் அல்லது ₹120 சம்பாதிப்பதற்காக உழைத்தால் ₹100கிடைக்கும்.

தைரியமாக உழைப்பை மட்டும் நீங்கள் நம்பி இருந்தால் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள். நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் - கடினமாக உழைப்பது.

நான்காம் எண்ணின் பலம் மற்றும் தன்மைகள்

ராகு என்பது நவீன காலத்தில் இருக்கும் தொழில்நுட்பம், புதிய துறைகள் ஆகியவற்றைக் குறிக்கும். பிரம்மாண்டமான வளர்ச்சி என்பது ராகுவின் காரகத்துவம். அது பிரம்மாண்டமான வளர்ச்சி என்பது எதிர்மறையாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஒரே நாளில் பிரபலமாக ஆவது அல்லது வீழ்வது என்பது ராகுவின் தன்மை தான். நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பல துறைகளில் திறமைகள் இருக்கும். அற்புதமாக திட்டமிடுவார்கள், கிரியேடிவிட்டியை விரும்புவார்கள், லாஜிக்கலாக முடிவெடுப்பார்கள்.

Also Read : பல்லி விழும் பலன்கள்... பல்லி நம் உடலில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்

பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதே போல பலரும் தயங்கும் புதிய விஷயங்களை 4 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தைரியமாக முயற்சி செய்வார்கள். இவர்களுக்கு சவால்கள் என்றால் பிடிக்கும். தங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது பலரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

டிசைனர்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய துறைகள், எழுத்தாளர்கள், ஆடிட்டர்கள், இசை கலைஞர்கள், ஜர்னலிசம், வக்கீல், ஆலோசனை, விவசாயம் ஆகியவை ஏற்ற துறைகள்.

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டியது

ராகு என்பது இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்றார் போல மாறிக்கொண்டே இருக்கும் ஒரு கிரகம். எனவே, உங்களுடைய ஆற்றலும் கவனமும் மாறிக்கொண்டே இருக்கும். கவன சிதறல் என்பது 4 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.

Also Read : புண்ணிய மாதம் புரட்டாசி - கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடு முறைகள்!

அடுத்ததாக நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களை மிகவும் எளிதாக நம்பிவிடுவார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பல துறைகளில் அறிவும், பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது ஒரு பக்கம் நன்மையாகவே இருக்கும். ஆனால், அதுவே இவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை அல்லது குறிக்கோளை அடைவதற்கு தடையாகவும் இருக்கும். காதல் மற்றும் உறவுகளைப் பொறுத்தவரை இவர்கள் மிக மிக உணர்ச்சிபூர்வமாக இருப்பதால் சில நேரத்தில் இவர்களுக்கு பிரச்சனையாக மாறிவிடும் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.

4 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்க என்ன செய்யலாம்

 • நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்கள், ஊதா, கருப்பு, நீலம் மற்றும் ஆரஞ்சு
 • ராசியான தினம் செவ்வாய் மற்றும் வெள்ளி
 • அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு
 • சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது, சனிக் கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்வது ஆகியவை இவர்களுக்கான தடைகளை நீக்க பெரிய அளவில் உதவும்
 • தினமும் குளித்த பின்பு நெற்றியில் சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது சாதகமாக இருக்கும்
 • கால்நடைகளுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உணவளியுங்கள்
 • எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் ஏதேனும் ஒன்றை சாப்பிட வேண்டும்
 • நீங்கள் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
 • அசைவம், மது, சிகரெட், ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்
 • லெதர் பொருட்கள் மற்றும் விலங்குகளின் தோலில் இருந்து செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்ததீர்கள்
 • உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எதிர்மறையாக செயல்படக்கூடும்.

Published by:Selvi M
First published:

Tags: Numerology