ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம்: தோனியின் ராசி நம்பர்.. 7 ஆம் எண்ணில் மறைந்திருக்கும் மர்மங்கள்.!

எண் கணித ஜோதிடம்: தோனியின் ராசி நம்பர்.. 7 ஆம் எண்ணில் மறைந்திருக்கும் மர்மங்கள்.!

எண் கணித ஜோதிடம் 7

எண் கணித ஜோதிடம் 7

Numerology 7 Personality | ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களுடைய அறிவை மற்றவர்களிடம் வெளிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவோ பெயரும் புகழும் பெறவோ விரும்ப மாட்டார்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

எண் கணித ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு தன்மைகள் மற்றும் குணங்கள் உள்ளன. அதேபோல வேத ஜோதிடத்திலும் கிரகங்கள் ஒவ்வொரு எண்ணை குறிக்கின்றன. இதில் 7 என்பது மிகவும் மர்மமான எண்ணாகவும், எளிதில் கணிக்க முடியாத எண்ணாகவும் கருதப்படுகிறது. ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுடைய மூளை எப்படியெல்லாம் சிந்திக்கும் என்பதை சொல்லவே முடியாது. இதனால் தான் ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பலரையும் பெரிய அளவில் ஈர்ப்பார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் மற்றவர்களுடன் அதிகமாக பேச மாட்டார்கள் தனித்து இருக்க விரும்புவார்கள். எண் கணித ஜோதிடத்தில், 7 எந்த கிரகத்தை சார்ந்தது மற்றும் இதில் மறைந்திருக்கும் மர்மங்கள் பற்றி பார்க்கலாம்.

உங்கள் பிறந்த தேதி 7, 25, 16 என பிறந்த தேதியின் மொத்தக்கூட்டல் 7 என இருந்தால் நீங்கள் 7ம் எண்ணில் பிறந்தவர்கள். அப்படியானால் இந்த மொத்த செய்தியும் உங்களுக்குத்தான்.

கேதுவின் ஆதிக்கத்தில் உள்ள 7 ஆம் எண்ணின் சிறப்பம்சங்கள்

எண் 7, கேதுவின் காரகத்துவம் கொண்டுள்ளது. 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கேதுவை ஞான காரகன் என்று கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேது தனக்கு இருக்கும் அறிவை வெளிப்படையாக பறை சாற்றிக் கொள்ள விரும்பாத ஒரு கிரகம். எனவே கேதுவின் ஆதிக்கத்தில் ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களுடைய அறிவை மற்றவர்களிடம் வெளிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவோ பெயரும் புகழும் பெறவோ விரும்ப மாட்டார்கள். மறைந்திருக்கும் அறிவு மற்றும் மர்மங்கள் ஆகியவற்றை இவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

பழமை மாறாதவர்கள், பாரம்பரிய சிந்தனை கொண்டவர்கள்

சந்தேகமே இல்லாமல் ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பக்தியும் ஆன்மிக ஆர்வமும் அதிகமாக இருக்கும். இவர்கள் மிக மிக பாரம்பரியமான சிந்தனைகள் கொண்டவர்கள். பழங்காலத்தில் இருந்து பின்பற்றி வரும் அனைத்து சிந்தனைகளையும், அனைத்து பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இவர்கள் பின்பற்றுவார்கள். எதை நம்புகிறார்களோ அதை பின்பற்றுவதில் தீவிரமாக இருப்பார்கள்.

Also Read : எண் கணித ஜோதிடம் | 4 ஆம் எண் ஆதிக்கம் தரும் தடைகள் மற்றும் வெற்றிகள்.!

உலகத்தை புரிந்து கொள்ள விரும்பும் பயண விரும்பிகள்

ஒரு பக்கம் பழமை மாறாத நபர்களாக இருந்தாலும், இவர்களின் மற்றொரு பக்கம் உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற பேரார்வம் கொண்டுள்ளது.

7 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், பயணம் செய்ய விரும்புவார்கள். பயணம் சென்று, பலவித மனிதர்களை, பலவித இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆசை இருக்கிறது. இவர்களின் விருப்பப்படி உள்ளூர், சொந்த நாடு அல்லது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடிந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை மிக பெரிய அளவில் மாற்றும் தன்மை கொண்டது.

பிறந்த இடத்தை விட்டு வேறிடம் சென்றால் செழிப்பாக வாழ முடியும்

பொதுவாக ஒரு சிலருக்கு பிறந்த இடத்தில் இருப்பதை விட வேறு இடத்திற்கு சென்றால் அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்று ஜோதிடத்தில் கூறுவார்கள். அது ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.

தாங்கள் பிறந்த இடத்திலிருந்து தொலைவில் இவர்கள் படிப்பது வேலை என்று தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், வெற்றி இவர்களைத் தேடி வரும். ஏற்றுமதி வணிகம் சாதகமாக இருக்கும். ஒரே ஒருமுறையாவது இவர்கள் வெளிநாடு சென்று வருவது சிறப்பு.

Also Read : பல்லி விழும் பலன்கள்... பல்லி நம் உடலில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்

வாழ்வில் ஏற்றம் கண்டாலும் திருப்தி இருக்கிறதா?

ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, பல விஷயங்களைத் தேடித்தேடி கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது; வாழ்வில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவதற்கான சாத்தியங்கள் சாதகமாகவே இருக்கிறது; வணிகத்தில் வெற்றி பெறும் நபராக இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு எளிதாக கற்றுக் கொள்ளும் திறனும் உள்ளது. இவை எல்லாமே ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சாதகமான விஷயங்கள், மற்றவர்களிடம் தனித்து காட்டும் விஷயங்கள்.

ஆனால், இவர்கள் குடும்ப வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட விஷயங்களிலும் சரி மற்றும் தொழில், வேலை என்று வரும்போதும் சரி, திருப்தியை அடைய முடியாது. உணர்ச்சி பூர்வமாக, உணர்வு பூர்வமாக இவர்கள் மகிழ்ச்சி குறைந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

எது கிடைத்தாலும், வாழ்க்கையில் திருப்தி இல்லை, மகிழ்ச்சி இல்லை. இது தனக்கு திருப்தியாக இருந்தது என்று 7 இல் பிறந்தவர்கள் திட்டவட்டமாக கூறவே முடியாது.

சிறுவயதில் அடிக்கடி உடல்நல தொந்தரவுகள் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. திருமண வாழ்க்கை இவர்களுக்கு சராசரியாக இருக்கும்.

7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சிறு வணிகத்தைத் தொடங்கலாம். அகல காலடி எடுத்து வைப்பது இவர்களுக்கு பாதகமாக முடியும். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைவார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களை, பெற்றோர்களை ஏளனமாகப் பேசக் கூடாது, அவமதிக்கக் கூடாது.

Also Read : கணபதி ஹோமம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

பலவித துறைகளில் இவர்களுக்கு நுண்ணறிவு இருக்கிறது என்பதால் ஆய்வு செய்யும் தீவிரமான கவனம் தேவைப்படும் துறைகள் இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

 • அதிர்ஷ்டமான நிறங்கள் – மஞ்சள் மற்றும் பச்சை
 • அதிர்ஷ்டமான தினம் - திங்கட்கிழமை
 • 7 என்ற எண்ணின் உருவத்தை செம்பு அல்லது பித்தளையால் செய்து எப்போதும் வைத்திருக்கலாம்
 • கேது பகவானை வழிபாட்டு வரலாம்
 • திங்கட்கிழமையன்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நல்லது
  • தினசரி இவர்கள் தினத்தை தொடங்கும் முன்பு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெற்று தொடங்கினால் தடைகள் ஏதும் ஏற்படாது

Published by:Selvi M
First published:

Tags: Numerology