ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் | எண் 5 இன் சிறப்புகள் மற்றும் அது தரும் அதிர்ஷ்டம்.!

எண் கணித ஜோதிடம் | எண் 5 இன் சிறப்புகள் மற்றும் அது தரும் அதிர்ஷ்டம்.!

எண் கணித ஜோதிடம் 5

எண் கணித ஜோதிடம் 5

Numerology 5 Personality | முன் ஜென்மத்தில் மிகவும் கடினமாக வேலை பார்த்திருப்பார்களுடைய கடந்த கால புண்ணியம் மற்றும் அனைத்துமே அதிர்ஷ்டமானதாக மாறி அவர்கள் ஐந்தாம் எண்ணில் பிறந்து இருப்பார்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

என் கணித ஜோதிடத்தில், ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கும் மற்றும் அதனுடைய காரகத்துவத்தைக் குறிக்கும். பிறந்த தேதியின் அடிப்படையில் எண்கணித பலன்களை வைத்து உங்களுடைய வாழ்க்கை பாதையையே உங்களுக்கு சாதகமாகவும் அதிர்ஷ்டமானதாகவும் மாற்ற முடியும். அதிக அதிர்ஷ்டம் எண்களில் ஒன்று 5.

என் கணித ஜோதிடத்தில் மற்றும் வேத ஜோதிடத்தில் எண் 5 என்பது புதன் பகவானை குறிக்கும். வேத ஜோதிடத்தில், 5 ஆம் பாவம் என்பது பாவ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கும் கிரகமாகும். எண் கணித ஜோதிட விதிகளில், எண் 5 அனைத்து எண்களையும் இயக்கும் சக்தியாக கருதப்படுகிறது.

பூர்வ ஜென்ம புண்ணியம் தான் 5 ஆம் எண்

முன் ஜென்மத்தில் மிகவும் கடினமாக வேலை பார்த்திருப்பார்களுடைய கடந்த கால புண்ணியம் மற்றும் அனைத்துமே அதிர்ஷ்டமானதாக மாறி அவர்கள் ஐந்தாம் எண்ணில் பிறந்து இருப்பார்கள். இதனால் தான், எண் 5 மிக மிக அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. எனவே இந்த பிறவியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஒரு வரமாகவும் பரிசாகவும் கிடைத்திருப்பது என்பது, உங்கள் முன் ஜென்மத்தில் இருந்து உங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு ஆகும்.

எண் 5 ஐச் சார்ந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, தைரியமாக இருப்பார்கள், எதிலும் நிலைத்தன்மையை தவிர மாட்டார்கள், பிரபலமாக இருப்பார்கள், அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டிருப்பார்கள், எப்போதுமே இளமையாக உணர்வார்கள் மற்றும் அனைவருக்கும் விருப்பமான நபராகவும் இருப்பார்கள்.

நீங்கள் 5, 14 அல்லது 23 ஆம் தேதியில் பிறந்திருந்தால் அதிர்ஷ்ட சக்கரம் எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாகத்தான் சுழலும்.

தொழிலில் வளர்ச்சி பெற 5 ஆம் எண் முக்கியம்

மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒரு நபரின் வாழ்வில் எண் 5 இன் ஆதிக்கம், அவருடைய வேலை, தொழில் அல்லது வணிகத்தில் இணைந்திருக்க வேண்டும். அப்போது தான் நிலையான வேலை அல்லது வணிகம் இருக்கும். எண் ஐந்தின் ஆதிக்கம் வேலையில் எந்தவித பிரச்சனை வந்தாலும் எளிதாக சமாளித்துக்கொண்டு அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல உதவும்.

Also Read : வெள்ளை பிள்ளையார் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ரொமான்டிக் ஆன நபர்கள்

5 ஆம் எண் காதல், திருமண வாழ்வு, எதிர்பாலின ஈர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒரு நபரின் மீது காதல் கொண்டால் தன்னுடைய உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவர்கள் ரொமான்டிக் ஆன நபர்கள். பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சாகசங்கள், வாகனம், பயணம் – எச்சரிக்கை தேவை

5 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சாகச பிரியர்கள். சவால்களை விரும்பி செல்லும் இவர்கள் சிக்கலில் சில நேரங்களில் மாட்டிக் கொள்வார்கள். பயணங்கள், சாகசம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றால் இவர்களுக்கு விபத்து நேரலாம். எனவே இவர்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எல்லா துறைகளிலும் இவர்களுக்கு ஈடுபாடும் அறிவும் இருப்பதால் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்; சட்டத்திற்கு புறம்பான எந்த விஷயங்களிலும் ஈடுபடக்கூடாது.

Also Read : பால் கொட்டுவது முதல் தயிர் சாப்பிடுவது வரை... இந்தியாவில் பின்பற்றப்படும் உணவு சார்ந்த 10 நம்பிக்கைகள்...

5 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்

உங்கள் வீட்டில் ஐந்தாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் யாரேனும் இருந்தால், உங்களுடைய நண்பர்களோ, உங்களுடன் பணிபுரிபவர்களோ இருந்தால், நீங்கள் அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அன்பு என்ற பெயரில் கட்டி போடவும் கூடாது அவர்கள் கொடுக்கும் அன்பை உதாசீனம் செய்யவும் கூடாது.

எண் 5 இல் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்க என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது

  • எல்லா புதன்கிழமைகளிலும் விநாயக பெருமானை வழிபட வேண்டும்
  • தினமும் காலை அல்லது மாலையில் பச்சை நிறப் புல்வெளியில் வெறுங்காலில் நடக்க வேண்டும்
  • ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்
  • வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அதிர்ஷ்டமான நிறங்களாகும்
  • புதன்கிழமை உங்களுடைய அதிர்ஷ்டமான தினம்
  • 5 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அசைவம், மது, புகையிலை மற்றும் லெதர் பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்

Also Read : சந்திரன் ஆளுமை கொண்ட 11ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்

உலகத்தில் மிகப் பெரிய சாதனை செய்தவர்கள் பெரும்பாலனவர்கள் ஐந்தாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான். உதாரணமாக தீபிகா படுகோனே, மனீஷ் மல்ஹோத்ரா, விராட் கோலி, ஸ்மிரீதி இராணி என்று இந்த பட்டியல் மிகவும் நீளமானது.

எண் ஐந்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, மீடியா மற்றும் அரசாங்க வேலைகளில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Numerology