ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் - 31 ஆம் தேதி பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

எண் கணித ஜோதிடம் - 31 ஆம் தேதி பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

எண் கணித ஜோதிடம் 31

எண் கணித ஜோதிடம் 31

Numerology 31 | ராகுவின் காரகம் கொண்ட எண் என்றாலும், 31 ஆம் தேதி பிறந்தவர்கள் தீவிரமான ராகுவின் தன்மைகள் கொண்டிருந்தாலும், அடிப்படையில் இவர்களை நம்பலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

தேதிகளில் 31 என்பது கொஞ்சல் ஸ்பெஷல் தான். எல்லா மாதங்களிலும் 31 ஆம் தேதி வருவதில்லை. எண் கணித ஜோதிடத்தில் 31 என்பதன் கூட்டு எண் 4, அதன் அதிபதி ராகு. ராகு என்பது இன்றைய நவீன மாற்றங்கள், கண்டுபிடிப்புகள், அதிரடி வளர்ச்சி, மாயை ஆகியவற்றுக்கான காரகத்தைக் கொண்டுள்ள கிரகம். 31 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு இந்தத் தன்மைகள் பொருந்தும்.

31 ஆம் தேதியில் ராகுவின் ஆதிகத்தில் பிறந்தவர்கள் அடிப்படை குணங்கள்:

ராகுவின் காரகம் கொண்ட எண் என்றாலும், 31 ஆம் தேதி பிறந்தவர்கள் தீவிரமான ராகுவின் தன்மைகள் கொண்டிருந்தாலும், அடிப்படையில் இவர்களை நம்பலாம். எல்லா இடங்களிலும் மரியாதையாக நடந்து கொள்வார்கள், எளிமையாக சிந்திப்பார்கள், புன்னகைத்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல, மற்றவர்களிடம் இல்லாத ஒரு ஸ்பெஷல் குணம் 31 ஆம் தேதி பிறந்தவர்களிடம் உள்ளது. சின்ன சின்ன வெற்றிகள் கிடைத்தாலும், இவர்கள் கடவுளுக்கும் தனக்கு உதவியவர்களுக்கும் நன்றியை தெரிவிக்க தவறவே மாட்டார்கள்.

புத்திசாலி, எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள், எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள், புதிதான விஷயங்கள் மீது ஆர்வம் கொண்டிருப்பார்கள், நல்ல நினைவாற்றல் உண்டு, அழகாக நேர்த்தியாக வேலை செய்வார்கள், மென்மையான இதயம் கொண்டவர்கள் மற்றும் உறவுகளில் விசுவாசமாக இருப்பார்கள்.

31 ஆம் தேதி பிறந்தவர்கள் மாற்றி கொள்ள வேண்டியவை

தானம் கொடுப்பது, உதவி செய்வது என்பதெல்லாம் தன்னிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதை இவர்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் ஒரு விஷயத்தை செய்தால் தான் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க முடியும். எனவே, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதை தவிர்க்காதீர்கள். அதே போல, எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள். குற்றம் சொல்வதை, குறைகளை சுட்டிக் காட்டுவதையும், பிறரை மட்டம் தட்டுவதையும் நிறுத்த வேண்டும்.

Also Read : ஏழரைச் சனி என்றாலே எல்லாரும் பயப்பட வேண்டுமா.?

31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்குக்கான சாதகமான துறைகள்

ராகுவின் ஆதிக்கம் இருப்பதால் இவர்களுக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். தீவிரமான கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருப்பவர்கள் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பும் இருப்பதால் ஆசிரியராகவோ, பயிற்றுனராகவோ அல்லது பயிற்சியாளராகவோ இவர்கள் சிறப்பாக இருப்பார்கள். கல்வி, யோகா, கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதைத் தவிர்த்து வயர், சிமென்ட், செங்கல், இரும்பு, மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களும், பொருட்கள் சார்ந்த துறைகளும் இவர்களுக்கு ஏற்ற துறைகள். நவீனமாக, புதிதாக உருவாகி வரும் தொழில் துறைகள், கட்டுமான துறை சார்ந்த பொருட்கள் சம்பந்தப்பட்ட வியாபாரம், வாஸ்து, சட்டம், ஏஜென்சி, புரோக்கர் ஆகிய துறைகளும் இவர்களுக்கு பொருத்தமானவை.

31 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுப்பவை:

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் கிரே

அதிர்ஷ்டமான நாட்கள்: வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்டமான எண்கள்: 6 மற்றும் 9

Also Read : எண் கணித ஜோதிடம் | 23 அதிர்ஷ்டமான பிறந்த தேதி.!

 • யாசகர்களுக்கு பச்சை நிற தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குங்கள்
 • காலையில் எழுந்த உடனேயே படுக்கையை எடுத்து வைக்க வேண்டும்
 • உங்கள் சுற்றுப்புறத்தை எப்போதுமே சுத்தமாக வைத்திருங்கள்
 • வீட்டைச் சுற்றி பச்சை நிறத் தாவரங்களை வளருங்கள்
 • சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்
 • ராகு கால பூஜை ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்யுங்கள்
 • ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள்
 • சிவப்பு அல்லது நீல நிற பேனாவை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருங்கள்
 • முடிந்த வரை சைவ உணவை சாப்பிடுங்கள்

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News