இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வரும் மதுரை சித்திரை திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்யானந்தா கைலாச நாட்டில் இருந்தவாறே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தியும், நித்யானந்தா சித்திரை திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தும், பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களையும் வழங்கினர்.
ஆசிரமம் சார்பில் வழங்கப்பட்ட அறுசுவை பிரசாதங்களை பெற ஏராளமான பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.