ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா?

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா?

ஏன் திருமணமான முதல் வருட ஆடியில் மட்டும்தான் கருத்தரிக்க வேண்டுமா என்ன? இரண்டாவது வருட ஆடியில் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? அல்லது இரண்டாவது குழந்தைதான் ஆடியில் கருவாக உருவாகாதா? அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டுமா? என  இது போன்ற கேள்விகளும் நம் மனதில் எழாமல் இல்லை.

  • Share this:
    ஆடி என்றவுடன் நம் நினைவிற்கு வருகின்ற நிகழ்வு புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பதுதான், ஆனி கடைசி தேதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

    அதையும் மீறி சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது  என்று மூட நம்பிக்கையையும் பரப்பி வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் யோகபலம் பெற்றநாளில் பரிகாரங்கள் செய்தால், பெற்றோர்களுக்கு தோஷங்கள் விலகி யோகங்கள் வந்துசேரும். பிள்ளைகளாலும் எந்த தொல்லையும் ஏற்படாது என்ற பரிகாமும் சொல்லப்பட்டுள்ளது.

    ஏன் திருமணமான முதல் வருட ஆடியில் மட்டும்தான் கருத்தரிக்க வேண்டுமா என்ன? இரண்டாவது வருட ஆடியில் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? அல்லது இரண்டாவது குழந்தைதான் ஆடியில் கருவாக உருவாகாதா? அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டுமா? என  இது போன்ற கேள்விகளும் நம் மனதில் எழாமல் இல்லை.

    ஆனால் ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Aadi | ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்...

    புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயானவள் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும், மணப்பெண், இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் சென்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: