ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | உத்தரம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | உத்தரம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

உத்தரம் நட்சத்திரம்

உத்தரம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 உத்தரம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரககூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

உத்தரம்:

சூரியனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட உத்தரம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடிதனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.  பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மதிப்பெண்கள்: 74% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News