ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | திருவாதிரை நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | திருவாதிரை நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 திருவாதிரை நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரககூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

திருவாதிரை:

ராகுவை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட திருவாதிரை நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்திலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்: நடராஜரை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

மதிப்பெண்கள்: 75% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News