ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | ரோஹிணி நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | ரோஹிணி நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

ரோஹிணி நட்சத்திரம்

ரோஹிணி நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 ரோஹிணி நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

ரோஹிணி:

சந்திரனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட ரோஹிணி நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.  பெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும். 

பொதுவாக இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

மதிப்பெண்கள்: 81% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News