ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூரட்டாதி நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூரட்டாதி நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 பூரட்டாதி நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

பூரட்டாதி:

கேதுவை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட பூரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். 

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். 

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

மதிப்பெண்கள்: 71% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News