ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூசம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூசம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

பூசம் நட்சத்திரம்

பூசம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 பூசம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

பூசம்:

சனியை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட பூசம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்கள் பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: குபேரனை வணங்கி வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

மதிப்பெண்கள்: 78% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News