நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.
பூரம்:
சுக்கிரனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு கடன்கள் அடையும்.
பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
மதிப்பெண்கள்: 78% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.