ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூராடம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | பூராடம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 பூராடம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

பூராடம்:

சுக்கிரனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட பூராடம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண்பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.  அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பொதுவாக இந்த ஆண்டு உங்களால் சாதனைகள் புரிய முடியும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை பாடல் பாடி வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News