ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | மூலம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | மூலம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 மூலம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

மூலம்:

கேதுவை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட மூலம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

மதிப்பெண்கள்: 75% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News