ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | மகம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | மகம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

மகம் நட்சத்திரம்

மகம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 மகம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

மகம்:

கேதுவை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட மகம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு அதிக பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.

பரிகாரம்: வினாயகரை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News