புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரககூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.
கேட்டை:
புதனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட கேட்டை நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அரசியல்வாதிகள்ளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அரசு அனுகூலம் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.
மதிப்பெண்கள்: 69% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.