நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.
பரணி:
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட பரணி நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் செலவை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
பொதுவாக இந்த ஆண்டு உங்கள் பொருளாதார நிலை உயரும்.
பரிகாரம்: துர்க்கையை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.