Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | ஆயில்யம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

புத்தாண்டு 2023 நட்சத்திர பலன்கள் | ஆயில்யம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம்

New Year 2023 Star Prediction | புத்தாண்டு 2023 ஆயில்யம் நட்சத்திர பலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரககூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

ஆயில்யம்:

புதனை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட ஆயில்யம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே இந்த ஆண்டு ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு வீடு மனை வாய்க்கும்.

பரிகாரம்: நாகதேவதையை தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 

மதிப்பெண்கள்: 75% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Tamil News