நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு - 17ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக்ஷ தசமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - ஸிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்னியா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு - நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.
அவிட்டம்:
செவ்வாயை நக்ஷத்ரநாதனாகக் கொண்ட அவிட்டம் நக்ஷத்ரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த ஆண்டு எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கபெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.
வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். பெண்கள் எதிர்பாராத செலவுகள் வரலாம். கலைத்துறையினர் தங்கள் வேலைகளை கவனமாக செய்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பணவரத்து தாமதமாகலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு சொத்துக்கள் சேரும்
பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.