தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை திருவிழா 3 நாட்கள் நடைபெறும். சுவாமி சன்னதியில் யாகபூஜை பூஜைகளுடன் தொடங்கும் இந்த திருவிழாவின் இரண்டாவது நாளில் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டின் தை அமாவாசை திருவிழா நேற்றைய தினம் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகளும் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்றப்படும் தங்க விளக்கு கோவில் கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு சுவாமி மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் இருந்து தங்க விளக்கு ஊர்வலமாக கோவில் உட்பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டு சுவாமி மணி மண்டபத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் தங்க விளக்கு ஏற்றப்பட்டது.
மேலும் படிக்க... சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண விரதமும் வழிபடும் முறைகளும்
இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா பத்ரதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளைய தினம் மாலையில் கோவில் தங்கக் கொடிமரம் முன்பு நடைபெறுகிறது.
மேலும் படிக்க... தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்...
இதனைத் தொடர்ந்து கோவில் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் சுப்பிரமணியர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nellai, Thai Amavasai