Home /News /spiritual /

நவராத்திரி விரதம் : அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் குறிப்புகள் இதோ!

நவராத்திரி விரதம் : அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் குறிப்புகள் இதோ!

நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம்

Navratri Fasting | நவராத்திரி விரதம் இருக்கும் போது, என்ன உணவுகளை சாப்பிடலாம் மற்றும் எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி தொடங்கும் செப்டம்பர் 26 திங்கட்கிழமையன்று நவராத்திரி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதி முடிகிறது. நவராத்திரிக்கு கொலு வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் கொலு வைக்காதவர்கள் என்று வெவ்வேறு வகையில் நவராத்திரியை கொண்டாடினாலும் பல பெண்களும் நவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் 9 நாட்களும் விரதம் இருந்து பூஜை செய்து, அம்பாளை வழிபடுவார்கள். சிலர், வெள்ளி, செவ்வாய், சஷ்டி போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விரதம் இருப்பார்கள். பொதுவாக நவராத்திரி விரதம் இருக்கும் போது, என்ன உணவுகளை சாப்பிடலாம் மற்றும் எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

நவராத்திரி விரத வகைகள்

நவராத்திரியில் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், அவரவருக்கு ஏற்றார்போல விரதத்தை கடைபிடிக்கலாம்.

ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது

முதலாவது, ஒன்பது நாட்களுமே ஒரே ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் காலையில் பூஜை செய்து, மாலையில் பூஜை செய்து முடிக்கும் வரை விரதமிருந்து மாலை பூஜைக்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள்.

ஒரு சிலர் காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடாமல் ஒரு வேளை உணவு மட்டும் உண்பார்கள்.

நாள் முழுவதும் உபவாசம் இருப்பது

ஒரு சில பெண்கள் நவராத்திரி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் மாலை நேரத்தில் பூஜை முடிந்து சுமங்கலிப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீட்டில் தாம்பூலம் கொடுத்து பிறகு பால் அருந்தி விரதத்தை முடிப்பார்கள். அதே போல தண்ணீர் மட்டும் அருந்தி நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.



அம்பாளுக்கு படைக்கும் நைவேத்தியம் மட்டுமே உண்டு விரதம் இருப்பது

ஒரு சிலர் ஒன்பது நாட்களும், அம்மனுக்கு எந்த வகையான நெய்வேத்தியத்தை படைத்து பூஜை செய்கிறார்களோ அதை மட்டுமே உணவாக சாப்பிடுவார்கள். உதாரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலவை சாதம், ஒவ்வொரு இனிப்பு வகை மற்றும் சுண்டல் வகை நைவேத்தியம் செய்யப்படும். காலையில் இனிப்பும், சாதம் நைவேத்தியம் செய்யப்பட்ட பிறகு அதையே தங்களுடைய உணவாக சாப்பிடுவார்கள்.

அதேபோல மாலை நேரத்தில் தினமும் ஒரு வகை சுண்டல் செய்து நைவேத்யம் செய்யும் போது, அதையே இரவு உணவாக சாப்பிடுவார்கள்.

Also Read : நவராத்திரி நாட்களில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது?

தீவிரமாக விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், உப்பு சேர்க்காமல் விரதம் கடைபிடிப்பார்கள்.

இதில் உங்களுக்கு எந்த மாதிரியான விரதம் மற்றும் உணவுகள் வசதியாக இருக்கிறதோ அதை நீங்கள் பின்பற்றலாம்.

விரதம் இருக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்

பெரும்பாலும் விரதம் இருக்கும் போது, பழங்கள், பால், மோர் மற்றும் பழச்சாறு ஆகியவை சாப்பிடலாம். ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், பால் அல்லது மோர் அருந்தலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். மேலும், திட உணவாக சாப்பிடாமல், கஞ்சி அருந்தலாம்.



1. பழ வகைகள்
2. அவல், வெல்லம்
3. தேங்காய் மற்றும் வாழைப்பழம்
4. ஜவ்வரிசி
5. பயிறு வகைகள்
6. ராகி

பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டு 9 நாட்களும் விரதம் இருக்கலாம்.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக விரதம் இருக்கையில், அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பல உணவுகள் தவிர்க்கப்படும். நவராத்திரி பூஜை செய்பவர்கள் முழுதாக இருக்கும் போது, அரிசி, கோதுமை, ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மேலும், விரதம் இருப்பவர்கள், வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் தவிர்த்து, ரெடிமேடாக பேக்கெட்டில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் எண்ணையில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, இவ்வகை உணவுகளை சாப்பிட்டால், செரிமான கோளாறு ஏற்படும்.

Also Read : நவராத்திரி கொலு வைப்பது எப்படி.? எத்தனை படிகள் முதல், என்ன பொம்மைகளை வைக்கலாம் என்பது வரை.!

விரதம் இருப்பவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

தொடர்ந்து ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலைத் தரும்; சிந்தனை தெளிவாகும் என்று பல விதமான நன்மைகளை அளிக்கும். இதனால்தான் பல சமூகங்களில், குறிப்பிட்ட நாட்களில் விரதம் அனுஷ்டிப்பது உடலுக்கு நல்லது என்று இன்று வரை பழக்கத்தில் உள்ளது. விரதம் இருந்து நவராத்திரியில் அம்பாளைப் பூஜிக்கும் நாட்களில், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் பின்வரும் விஷயங்களைப் பின்பற்றலாம்.



1. நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், அவ்வபோது தண்ணீர், நீர் மோர் மற்றும் பழச்சாறுகளைக் குடிக்கலாம்
2. நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம்
3. வேக வைத்த சுண்டல், பாதாம், முந்திரி, திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம்
4. நன்றாக தூங்க வேண்டும். விரதம் இருப்பது கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தும் என்பதால் தூக்கம் மிகவும் அவசியம்
5. விரத நாட்களில் தேவை இல்லாத வாக்குவாதங்கள், சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு உங்கள் ஆற்றலை இழக்காதீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Fasting, Navaratri

அடுத்த செய்தி