• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நவராத்திரி : கொலு பொம்மையில் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

நவராத்திரி : கொலு பொம்மையில் இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு

இந்த படியில் எந்த குழப்பமும் கொள்ளாமல் வரிசைப்படுத்த வேண்டும்.

  • Share this:
    நவராத்திரி முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை விரதம் இருந்து வழிபடும் நாட்கள்.

    நவராத்திரி சோழர்கள் காலத்தில் அரச விழாவாக கொண்டாடப்பட்டது என்ற சான்றுகளையும் புராணங்கள் கூறுகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும். வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம். பல கோவில்களிலும் கொலு வைத்து பூஜை செய்து வழிபடுதலும் வழக்கத்தில் உள்ளது. நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். இந்த ஒன்பது நாட்களும் விரதத்தை முறையாக கடைப்பிடித்து பூஜை செய்தால் வீட்டில் லட்சுமி தங்கும். செல்வம் பெருகும். கேட்டது எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

    பொதுவாக வீடுகளில் கொலு பொம்மை வைப்பவர்கள் 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் என அவர்கள் வசதிகேற்ப வைக்கலாம். கொலு படி வைப்பதற்கு காரணமே, படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர வேண்டும் என்பதை உணர்த்த தான். இந்த கொலு படியில் பொம்மைகளை அடுக்கும் போது எப்போதுமே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொலு படியின் ஒவ்வொன்றில்ஓரறிவு,ஈரறிவு, மூவறிவு உயிரனங்களை வரிசைப்படுத்த வேண்டும். இந்த படியில் எந்த குழப்பமும் கொள்ளாமல் வரிசைப்படுத்த வேண்டும்.

    ஒருவேளை கொலு வைக்க முடியவில்லை என்றால், சாதாரணமாக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து, நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், தானியங்களை வேகவைத்து இறைவனுக்கு படைக்கலாம். ஏனெனில் இந்த 9 நாட்களும் இறைவனுக்கு மிகவும் விசேஷமான நாட்களாக பார்க்கப்படுகிறது. வழிப்பட மறவாதீர்கள். இப்போது எப்படி கொலு பொம்மை அடுக்குவது என பார்க்கலாம்.

    நவராத்திரி வரலாறு, சுப முகூர்த்த நேரம், வழிபாட்டின் முக்கியத்துவம்! - முழு விவரம்

    முதல் படியில் மரம், செடி, கொடி என ஓரறிவு உயிரினங்களை வரிசைப்படுத்த வேண்டும். இரண்டாவது படியில் ஈரறிவு உயிரினங்கள். அதாவது சங்கு போன்றவற்றை வைக்கலாம்.மூன்றாவது படியில் மூவறிவு உயிரனங்களான கரையான், எறும்பை வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கறிவு உயிரினங்கள் நண்டு , நத்தை ஐந்தாவது படியில் பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம். ஆறாவது படியில் திருமணங்கள், மனிதர்கள்,கடை, வியாபாரம், நடன பொம்மைகளை வைக்கலாம். ஏழாவது படியில் மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். எட்டாவது படியில் தசாவதாரம், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம். ஒன்பதாவது படியில் பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பம், பிள்ளையார் பொம்மை வைக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: