நவராத்திரி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டத் துவங்கிவிட்டது. நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான். எல்லாருடைய வீட்டிலும் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாடும் பழக்கம் இல்லை. கொலு இல்லாமலும், அம்பாளின் திருவுருவப் படங்களுக்கு தினமும் மலர் மாலை சாற்றி, வழிபட்டு நவராத்திரி கொண்டாடுபவர்கள் இருக்கின்றனர். இருப்பினும், அவரவர் வசதிக்கு ஏற்றவாறு, கொலு வைத்து அலங்கரித்து ஒன்பது நாளும் அம்பாளை வழிபடுவது தனிச்சிறப்பு.
நவராத்திரி கொலு பொம்மைகள் எப்போது வாங்குவது
ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்துக்கான முதல் படியே, கொலுப் படிகளை எப்படி அலங்கரிக்க வேண்டும், எந்த பொம்மைகளை எவ்வாறு வைக்க வேண்டும் என்பது தான். விதவிதமாக கொலு பொம்மைகள் வாங்கி அலங்கரித்தாலும், வீடு முழுக்க பொம்மைகள் வாங்கும் பழக்கம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொம்மைகள் வாங்க வேண்டும் என்பது ஐதீகம். உங்களிடம் எல்லா வகையான பொம்மைகள் இருந்தாலும், ஏதேனும் ஒரு புது பொம்மையாவது கொலுவில் வைக்க வேண்டும்.
நவராத்திரி மிகவும் சக்தி வாய்ந்த நாட்கள் என்பது மட்டுமல்லாமல், தீய சக்தி, எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் நீக்கும் வல்லமை படைத்த அம்பாளை பூஜிக்கும் போது, அதில் ஒரு அங்கமாக இருக்கும் கொலு பொம்மைகளை வாங்க முகூர்த்த நேரம், சுப முகூர்த்த ஹோரை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பொம்மைகள் வாங்க சிறந்த நேரம் என்பதை நீங்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சாதாரணமாக கடைக்கு சென்று பொருட்களை வாங்குவது போல கொலுவில் வைக்கும் பொம்மைகளை வாங்க முடியாது.
Also Read : நவராத்திரி 2022 வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தேதிகள்.!
நீங்கள் ஒரு சிறிய பொம்மை வாங்கினாலும் சரி அல்லது கொலுவில் பிரதானமாக வைக்கக் கூடிய அம்மன் சிலைகள், தசாவதாரம், திருமணம் சம்பந்தப்பட்ட பொம்மைகளை வாங்கினாலும் சரி; எதுவாக இருந்தாலும், நல்ல நாள் நேரம் பார்த்து வாங்க வேண்டும். அதே போல, புதிதாக கொலு வைக்க விரும்புகிறவர்கள், இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நவராத்திரி 2022 – கொலு வைக்க ஏற்ற முகூர்த்தம், நல்ல நேரம் மற்றும் ஹோரை
செப்டம்பர் 26 திங்களன்று அன்று நவராத்திரி தொடங்க இருக்கிறது.
செப்டம்பர் 25, அமாவாசை அன்றே பலர் வீட்டிலும் சாஸ்திரத்துக்கு கொலு வைத்து விட்டு தொடங்கி விடுவார்கள்.
எனவே, நீங்கள் பொம்மைகள் வாங்குவதை அதற்கு முன்னரே செய்ய வேண்டும்.
செப்டம்பர் 20 செவ்வாய் கிழமை அன்று முடிந்தவரை புதிய பொம்மைகளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
வரும் நாலைந்து நாட்களில், செப்டம்பர் 21, புதன் கிழமை, மேல் நோக்குநாளாக, நல்ல நாளாக இருக்கிறது. புதிதாக கொலு வைப்பவர்கள், புதன் கிழமை, சுப ஹோரைகளில், அதாவது சுக்ரன் மற்றும் குரு ஹோரைகளில் பொம்மை வாங்கலாம்.
Also Read : புண்ணிய மாதம் புரட்டாசி - கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடு முறைகள்!
புதன் கிழமை சுப முகூர்த்த ஹோரை நேரம்:
காலையில் குரு ஹோரை - 09:00 AM to 10:01 AM
மதியம் சுக்ர ஹோரை - 12:02 PM to 01:03 PM
மாலையில் குரு ஹோரை - 04:05 PM to 05:05 PM
மாலையில் சுக்ர ஹோரை - 07:05 PM to 08:05 PM
ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் வாங்கலாம். மேலும், வார நாட்களில் கொலு பொம்மை வாங்க நேரமில்லாதவர்கள், அமாவாசை அன்று, வாங்கி, அன்றே கொலு வைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.