முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நவராத்திரி வரலாறு, சுப முகூர்த்த நேரம், வழிபாட்டின் முக்கியத்துவம்! - முழு விவரம்

நவராத்திரி வரலாறு, சுப முகூர்த்த நேரம், வழிபாட்டின் முக்கியத்துவம்! - முழு விவரம்

 நவராத்திரி வரலாறு

நவராத்திரி வரலாறு

இந்த ஆண்டு, நவராத்திரி அக்டோபர் மாதம் 7 அன்று தொடங்கி, அக்டோபர் 15 அன்று நிறைவு பெறுகிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

நம் நாட்டில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்துக்களும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. நவராத்திரி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பத்து நாட்கள் கோலாகலமாக, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. தீமைக்கு எதிரான நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை அமைந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு விதமாக துர்கா தேவியை வழிபாடுகள் நவராத்திரியில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு, நவராத்திரி அக்டோபர் மாதம் 7 அன்று தொடங்கி, அக்டோபர் 15 அன்று, விஜய தசமி அன்று நிறைவு பெறுகிறது. நவராத்திரியின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் பூஜைக்கு ஏற்ற சுபமுகூர்த்த நேரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

நவராத்திரி 2021: வராலாறு,

இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.

எனவே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர்.

நவராத்திரி - சுபமுகூர்த்த நேரங்கள் :

நாள் 1: நவராத்திரியின் முதல் நாள், பிரதமை அன்று தொடங்கும். இந்த திதி அக்டோபர் 6, மாலை 04:34 தொடங்கி, அக்டோபர் 7 மதியம் 01:46 அன்று முடியும். நைவேத்தியம், மற்றும் பூஜைக்கான நேரம்: அக்டோபர் 7 அன்று காலை 06:17 முதல் 07:07 வரை மற்றும் காலை 11:45 முதல் நண்பகல் 12:32 வரை.

நாள் 2: அக்டோபர் 8 அன்று துவிதியை திதி அக்டோபர் 7, நண்பகல் 01:46 மணிக்குத் துவங்கி மற்றும் அக்டோபர் 8 காலை 10:48 மணிக்கு முடிகிறது.

நாள் 3: அக்டோபர் 8 அன்று திரிதியை திதி காலை 10:48 முதல் அக்டோபர் 9, காலை 07:48 வரை உள்ளது.

நாள் 4: அக்டோபர் 9 அன்று சதுர்த்தி திதி, காலை 07:48 முதல் அக்டோபர் 9, காலை 04:55 வரை உள்ளது.

நாள் 5: அக்டோபர் 10 அன்று பஞ்சமி திதி, காலை 04:55 முதல் அக்டோபர் 11, காலை 02:14 வரை உள்ளது.

நாள் 6: அக்டோபர் 11 அன்று சஷ்டி திதி, காலை 02:14 முதல் அக்டோபர் 11, இரவு 11:50 வரை உள்ளது.

நாள் 7: அக்டோபர் 12 நவராத்திரியின் சப்தமி ஆகும், இது அக்டோபர் 11, அன்று இரவு 11:50 மணிக்கு தொடங்கி அக்டோபர் 12 அன்று இரவு 09:47 வரை நீடிக்கும்.

நாள் 8: மகாஷ்டமி அல்லது மகா துர்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் அஷ்டமி திதி நவராத்திரியில் தனிச்சிறப்பு வாய்ந்த திதியாகும். இந்த திதி, அக்டோபர் 12 இரவு 09:47 முதல் அக்டோபர் 13 08:07 வரை நீடிக்கும்.

நாள் 9: நவமி திதி அல்லது மகாநவமி என்பது துர்கா தேவி மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற நாள். இது அக்டோபர் 13 இரவு 08:57 முதல் அக்டோபர் 14, மாலை 06:52 வரை நீடிக்கும்.

நாள் 10: தசமி திதி அல்லது விஜயதசமி நவராத்திரியின் கடைசி நாள். இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் மகிஷாசுரன் மீது துர்கா தேவியின் வெற்றியை கொண்டாடுகிறது. இது அக்டோபர் 14 மாலை 06:52 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15 அன்று மாலை 06:02 வரை தொடரும்.

First published:

Tags: Navarathri