ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நவராத்திரி முடிந்த பிறகு கொலு பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி.?

நவராத்திரி முடிந்த பிறகு கொலு பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி.?

நவராத்திரி

நவராத்திரி

Navaratri 2022 | நவராத்திரி முடிந்த பிறகு கொலு பொம்மைகளை சாஸ்திர சம்பிரதாய முறைப்படி எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி இன்றுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 4-ம் தேதியான இன்று  சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகிய இரண்டு பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாளான விஜயதசமியன்று, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது, புதிய கணக்குத் தொடங்குவது, ஆகிய சுப காரியங்களை செய்வார்கள்.

விஜயதசமிக்கு பூஜை செய்வதோடு நவராத்திரி கொண்டாட்டம் நிறைவடைந்துவிடும். கொலு வைக்காதவர்களுக்கு வழக்கம் போல அன்றாட பணிகளை பார்க்க முடியும். ஆனால் கொலு வைத்தவர்களுக்கு, கொலு வைப்பதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறார்களோ, அதே அளவுக்கு கொலு பொம்மைகளை எடுத்து வைப்பதிலும் மெனக்கெடல் தேவைப்படும். சாதாரணமாக கொலு பொம்மைகளை அப்படியே எடுத்து வைக்க முடியாது. கொலு வைக்கும் போது, எந்தப்படிகளில் எந்த பொம்மை வைக்க வேண்டும், எத்தனை படிகள் வைக்க வேண்டும் என்பதை பற்றி பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, கொலு பொம்மையை எடுத்து வைப்பதற்கும் அதேபோல ஒரு சில வழிமுறைகள் உண்டு.

நவராத்திரி முடிந்த பிறகு கொலு பொம்மைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றை சாஸ்திர சம்பிரதாய முறைப்படி எவ்வாறு கொலு பொம்மைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒன்பது நாட்களுமே இறைவன் பல்வேறு உருவங்களில் அம்மனாக, சிவபெருமானாக, விஷ்ணுவாக உங்கள் வீட்டை காத்தருளி இருக்கிறார். உங்களை இரவு பகலாக பாதுகாத்து இருக்கிறார்.

பெரும்பாலானவர்கள் விஜயதசமி நாளன்று கொலு பொம்மைகளை எடுத்து விடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜயதசமி அன்று கொலு பொம்மைகளை எடுத்து வைக்க கூடாது. விஜயதசமி என்பது நவராத்திரியின் நீட்டிப்பு தான். நவராத்திரிக்கு வழக்கம் போல எப்படி பூஜை செய்கிறீர்களோ, அதேபோல பூஜை செய்து நைவேத்யம் செய்து விஜயதசமி அன்று வழிபட வேண்டும்.

சரஸ்வதி பூஜை நாளன்று பூஜையில் வைக்கப்படும் புத்தகங்களை எடுத்து விஜயதசமி அன்று படிக்க வேண்டும்.

Also Read : வெள்ளையனை விரட்டி வென்ற விஜயதசமி - விடுதலை வரலாற்றில் பெண் ஆளுமை தினம் இது!

விஜயதசமி நாள் இரவில், ஒரு சில பொம்மைகளை படுத்த வாக்கில் வைக்க வேண்டும். அதாவது நின்று கொண்டே இருக்கும் பொம்மைகளை, சாய்ந்த படி அல்லது படுக்கும் படி வைக்க வேண்டும். இதன் மூலம் கொலு பொம்மைகள் வடிவில் இருக்கும் இறைவன் ஓய்வு எடுக்கிறார் என்று பொருள்.

கொலுவில் வைத்திருக்கும் எல்லா பொம்மைகளையும் அவ்வாறு செய்யவேண்டாம். குறிப்பிட்ட சில பொம்மைகளை மட்டும், நீங்கள் அவ்வாறு படுக்க வைக்கலாம்.

கொலு பொம்மைகளை எடுத்து வைப்பதற்கு ஒருசில நாட்கள் உள்ளன. உதாரணமாக விஜயதசமிக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை என்று வரும்பொழுது வெள்ளிக்கிழமையன்று கொலுவைக் கலைக்க கூடாது. எனவே வெள்ளிக்கிழமையன்று நீங்கள் வழக்கம் போல கற்பூர தீபாரதனை காட்டி பழம் அல்லது கற்கண்டு ஏதேனும் நைவேத்தியம் செய்து அன்றும் பூஜை செய்யலாம். ஆனால் இந்த ஆண்டு விஜயதசமிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமைதான் வருகிறது. எனவே வியாழனன்று நீங்கள் பொம்மைகளை எடுத்து வைக்கலாம்.

Also Read : 9 பகுதிகள், 9 கலாச்சாரம், 9 இரவுகள்... இந்தியாவின் நவராத்திரி திருவிழாக்கள் இவை!

இதை தவிர்த்து பொம்மைகளை தனி தனி செட்டுகளாக நீங்கள் எப்படி வாங்கினார்களோ அதே போல தனித்தனியாக அவை உடையாமல் இருக்குமாறு பேக் செய்ய வேண்டும். பழங்காலத்தில் வைக்கோல் சுற்றப்படும். ஆனால் தற்போது வைக்கோலுக்கு பதில் தெர்மாகோல் பயன்படுத்தலாம். பொம்மைகளை எடுத்து காகிதத்தில் சுற்றி, தெர்மாகோல் வைத்து அட்டை பெட்டியில் அதனை தடுக்கலாம்.

உடைந்து போன பொம்மைகள் ஏதேனும் இருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுங்கள். கொலுவில் வைத்து உடைந்த பொம்மைகள் அல்லது கொலுவில் இருந்து எடுத்து நீங்கள் வைக்கும் போது பொம்மைகள் ஏதேனும் உடைந்து போனது போல காணப்பட்டாலும் கூட அதை நீங்கள் பயன்படுத்த கூடாது. பொம்மைகளை எல்லாம் எடுத்த பிறகு கடைசியாக கலசத்தை எடுக்க வேண்டும்.

Published by:Selvi M
First published:

Tags: Navaratri