ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 6 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

அருள் தரும் நவராத்திரி நாள் 6 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

சண்டிகா தேவி

சண்டிகா தேவி

Navaratri Day 6 2022 | லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி என்று மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ததை அடுத்து, அம்பிகையருக்கு திருவிழா கோலம் பூண்டு ஒன்பது இரவுகள் நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கும் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இதில் ஆறாம் நாளான சஷ்டி திதி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்கியுள்ளது. நவராத்திரியின் 6ஆம் நாள், அக்டோபர் 1 ஆம் தேதி அன்று வருகிறது.

நவராத்திரி நாள் 6: அக்டோபர் 1 , சனிக்கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: கௌமாரி, காத்யாயினி, சண்டிகா தேவி

திதி: சஷ்டி

நிறம்: சாம்பல்

மலர்: செம்பருத்தி பூக்கள்

கோலம்: கடலை மாவினால் அம்பாளின் பெயர் எழுதி கோலம் போட வேண்டும்

ராகம்: நீலாம்பரி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தேங்காய் சாதம் மற்றும் மாலை நேரத்தில் பச்சை பயிறு சுண்டல்

காத்யாயினி மந்திரம்:

‘ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்’

பலன்கள்: பல தலைமுறைகளாக தொடரும் சாபங்கள் நீங்கும், பரம்பரையாக தொடரும் பிரச்சனைகள், பய உணர்வு போகும், ஒட்டுமொத்த குடும்பமும் சுபிட்சம் பெறும்

நவராத்திரியின் ஆறாம் நாளில், காத்யாயினி, கௌமாரி, மற்றும் சண்டிகா தேவியையும், வணங்கி வழபடலாம்

நவ துர்க்கைகளில் ஒருவரான காத்யாயினி, திருமண வரம் அருள்வார். சப்த கன்னிமாரில் ஒருவரான காத்யாயினி தேவி, தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார்.

Also Read : நாயகியின் நவராத்திரி - கதையும் காரணமும்.!

சண்டிகா தேவி என்பவர் மகாலட்சுமியின் மிகவும் சக்தி வாய்ந்த சொரூபங்களில் ஒருவர். சண்டிகா தேவியை வணங்கினால், பல தலைமுறைகளாக உங்கள் குடும்பத்தில் நிலவி வரும் சாபங்கள், பிரச்சனைகள், உடல் நல பாதிப்புகள், வறுமை நிலை ஆகியவை நீங்கும். பரம்பரையாக உள்ள பிரச்சனைகள் நீங்க, ஒரு சிறுமியை அழைத்து, நலங்கு வைத்து, விருந்து படைத்து, புதிய ஆடை வழங்கி, சண்டிகா தேவியாக வழிபடலாம்.

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். அஷ்டலக்ஷ்மி நாமாவளி, அபிராமி அந்தாதி, ஆகிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். மேலும், சஷ்டி திதி என்பதால், கந்த சஷ்டி கவசத்தையும் ஆகியவற்றை ஒலிக்கச் செய்யலாம்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், கடலை மாவினால் தேவியின் திருநாமத்தை அழகாக கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

Also Read : 9 பகுதிகள், 9 கலாச்சாரம், 9 இரவுகள்... இந்தியாவின் நவராத்திரி திருவிழாக்கள் இவை!

கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

சனிக் கிழமை அன்று முடிந்தால், நவராத்திரி பூஜை செய்த பின்பு, முருகர் மற்றும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

பூஜைக்கான நேரம்:

காலை 9 மணிக்குள்

மாலை 6 மணிக்கு மேல்

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது. இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும்.

காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம். சஷ்டி என்பது நவராத்திரியின் ஆறாம் நாள். எனவே, இது வரை அகண்ட தீபம் எற்றாதவர்கள், இன்று ஏற்றலாம். மூன்று நாட்களுக்கு அகண்ட தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Navaratri