ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 5 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

அருள் தரும் நவராத்திரி நாள் 5 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

நவராத்திரி நாள் 5

நவராத்திரி நாள் 5

Navaratri Day 5 2022 | லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி என்று மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ததை அடுத்து, அம்பிகையருக்கு திருவிழா கோலம் பூண்டு ஒன்பது இரவுகள் நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவராத்திரியானது புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு, இரண்டாம் மூன்று நாட்கள் லக்ஷ்மி தாயாருக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்கியுள்ளது. நவராத்திரியின் 5ஆம் நாள், செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று வருகிறது.

நவராத்திரி நாள் 5: செப்டம்பர் 30, வெள்ளி கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: வைஷ்ணவி தேவி (மோகினி), மகேஸ்வரி, ஸ்கந்த மாதா

திதி: பஞ்சமி

நிறம்: பச்சை

மலர்: மனோ ரஞ்சிதம், பாரிஜாதம், திருநீற்றுப் பச்சிலை

கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போடா வேண்டும்

ராகம்: பந்துவராளி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தயிர் சாதம் மற்றும் மாலை நேரத்தில் கடலை பருப்பு சுண்டல்

மந்திரம்: கனக தாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம்

பலன்கள்: புத்திர பாக்கியம் கிடைக்கும், வீட்டில் சுபிட்சம் உண்டாகும், விரயங்கள் குறையும், பெண் தெய்வங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும், சாப நிவர்த்தி பெறலாம்

நவராத்திரியின் ஐந்தாம் நாளில், வைஷ்ணவி தேவியையும், மகேஷ்வரியையும் வணங்கி வழபடலாம். மோகினி தேவியை வழிபட்டால், உலக மாயைகளில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம். தேவையற்ற மனக்குழப்பங்கள், கவலைகள், சஞ்சலங்கள், விரயங்கள், பணம், பொருள் செலவு, உடல் உழைப்பு, நிம்மதியின்மை என்று எல்லாவற்றிலும் இருந்து, வைஷ்ணவி தேவி காத்தருளுவார்.

Also Read : 9 பகுதிகள், 9 கலாச்சாரம், 9 இரவுகள்... இந்தியாவின் நவராத்திரி திருவிழாக்கள் இவை!

நவராத்திரி ஐந்தாம் நாளில், நவ துர்கைகளில் ஒருவரான ஸ்கந்த மாதா என்ற அம்சத்தை தேவி வடிவில் வழிபடுகின்றனர். மடியில் ஸ்கந்தன் என்று அழைக்கப்படும் ஆறுமுகனை வைத்துக் கொண்டு, நான்கு கரங்களோடு தரிசனம் தரும் ஸ்கந்த மாதாவை வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, அச்சமின்றி துணிச்சலுடன் செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது.

பெண் சாபம் நீங்கவும், பெண் தெய்வங்களின் அனுகிரகம் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கவும், நவராத்திரி ஐந்தாம் நாளில் வீட்டுக்கு சிறுமிகளை அழைத்து விருந்து சமைத்து பரிமாறி, உங்களால் இயன்ற பொருட்களை தாம்பூலமாக வைத்துக் கொடுக்கலாம்.

இந்த நவராத்திரியில், ஐந்தாம் நாள் வெள்ளி கிழமை அன்று வருவது மிகச்சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் சிறுமிகளை அழைத்து, உணவளித்து, ஆடை, வளையல், கண்ணாடி, மருதாணி என்று பொருட்களை அவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்குடன் வழங்கி, ஆசி பெறலாம்.

அம்பாளுக்கு சமைத்து நைவேத்தியம் செய்த உணவை அவர்களுக்கு முதலில் வழங்கி நீங்கள் சாப்பிடலாம். அதே போல, சுமங்கலிப் பெண்களையும் வீட்டுக்கு வரவேற்று, தாம்பூலம் கொடுத்து அவர்களின் ஆசி பெற இன்று உகந்த நாள்.

Also Read : அருள் தரும் நவராத்திரி நாள் 4 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று மகா லட்சுமி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்து, அஷ்டலக்ஷ்மி நாமாவளி, அபிராமி அந்தாதி, கனக தாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை ஒலிக்கச் செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலைகள் சூட்டி அலங்கரிக்கலாம்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், கடலை மாவினால் பறவை வடிவ கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

வெள்ளி அன்று வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, சுபிட்சம் உண்டாக, கையில் செல்வம் தங்க, விரயம் குறைய, வீட்டுக்கு சிறுமிகள் மற்றும் பெண்களை தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

பூஜைக்கான நேரம்:

காலை 10.30 மணிக்குள்

மாலை 6 மணிக்கு மேல்

Also Read : புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது..? கதையும் காரணமும்

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்:

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது. இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம்.

காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.

First published:

Tags: Navaratri