ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 4 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

அருள் தரும் நவராத்திரி நாள் 4 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

மகாலாட்சுமி

மகாலாட்சுமி

Navaratri Day 4 2022 | நவராத்திரி நான்காம் நாளில், கஷ்மண்டா என்ற சக்தி சொரூபமும் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது ஐதீகம். கஷ்மாண்டா என்பவர் இந்த அகிலத்தைப் படைத்த சக்தி என்று அருத்தம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி என்று மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ததற்காக, நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அலங்காரம், ஆராதனை, மற்றும் ஒவ்வொரு அவதராமாக வழிபடும் வழக்கம் உள்ளது, இதைத் தவிர்த்து, முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு, இரண்டாம் மூன்று நாட்கள் லக்ஷ்மி தாயாருக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்கியுள்ளது. நவராத்திரியின் 4ஆம் நாள், செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று வருகிறது.

நவராத்திரி நாள் 4: செப்டம்பர் 29, புதன் கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: மகாலட்சுமி

திதி: சதுர்த்தி

நிறம்: மஞ்சள்

மலர்: ஜாதி மல்லி

கோலம்: படிக்கட்டு வேண்டும்

ராகம்: பைரவி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் கதம்ப சாதம் மற்றும் மாலை நேரத்தில் பட்டாணி சுண்டல்

மந்திரம்: மகாலட்சுமி அஷ்டோத்திரம்

பலன்கள்: சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்

நவராத்திரியின் நான்காம் நாளில், மகாலாட்சுமி தாயாரையும், கஷ்மாண்டாவையும் வணங்கி வழிபடலாம். வாழ்வின் எல்லா ஐஸ்வர்யங்களுக்கும் உரிதாக இருப்பவர் மகாலட்சுமி. லக்ஷ்மி கடாட்சம் என்று கூறுவார்கள். அனைத்து வளங்களையும் பெற்று சுபிட்சமாக வாழ நவராத்திரி அன்று மகாலட்சுமி தயாரை ஜாதி மல்லி உள்ளிட்ட வாசனைப் பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.

நவராத்திரி நான்காம் நாளில், கஷ்மண்டா என்ற சக்தி சொரூபமும் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது ஐதீகம். கஷ்மாண்டா என்பவர் இந்த அகிலத்தைப் படைத்த சக்தி என்று அருத்தம்.

Also Read : 9 பகுதிகள், 9 கலாச்சாரம், 9 இரவுகள்... இந்தியாவின் நவராத்திரி திருவிழாக்கள் இவை!

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

இன்று மகா லட்சுமி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்து, அஷ்டலக்ஷ்மி நாமாவளி, அபிராமி அந்தாதி, கனக தாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை ஒலிக்கச் செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலைகள் சூட்டி அலங்கரிக்கலாம்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், படிக்கட்டுக் கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

வியாழன் அன்று வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, வறுமை மற்றும் கடன் நீங்க, நீங்கள் குருவாக நினைக்கும் மூத்த பெண்மணிகளை வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யலாமா.

Also Read : நவராத்திரி விரதம் : அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் குறிப்புகள் இதோ!

பூஜைக்கான நேரம்:

காலை 9 மணிக்குள்

மாலை 6 மணிக்கு மேல்

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது. அகண்ட தீபம் என்றால் அணையா விளக்கு ஆகும். ஆனால், இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம்.

காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Navaratri