ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 3 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

அருள் தரும் நவராத்திரி நாள் 3 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

ஸ்ரீ வாராஹி அம்மன்

ஸ்ரீ வாராஹி அம்மன்

Navaratri Day 3 | புதன் கிழமை வாராகிக்கு மிகவும் உகந்த நாள், கடன் தொல்லை நீங்கவும், கண் திருஷ்டி விலகவும், இன்று வாராகியை வீட்டில் வழிபாடு செய்து, வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகிஷனை அழித்த ரூபத்தில், அம்பாள் நவராத்திரி 3 ஆம் நாளில் வாராகியாக காட்சி தருகிறார். சக்தி தேவியின் மகிமையை கொண்டாட, அம்பாளின் அனுகிரகம் பெற, நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், விருந்தினர்கள், நண்பர்களை அழைத்து உபசரிப்பது, தாம்பூலம் கொடுப்பது, என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். கோவில்களில் நடைபெறும் உற்சவம், அம்பிகையின் அலங்காரம் போல, வீட்டிலும் சக்தி தேவியின் அவதாரங்களுக்கு விதவிதமான பூஜைகள், அலங்காரங்கள் என்று அமர்க்களப்படும், 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்குகிறது, நவராத்திரியின் 3 ஆம் நாள், செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வருகிறது.

நவராத்திரி நாள் 3: செப்டம்பர் 28, புதன் கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: ஸ்ரீ வாராஹி அம்மன், இந்திராணி

திதி: திரிதியை

நிறம்: கரு நீலம்

மலர்: சம்பங்கி, துளசி

கோலம்: பூக்களால் கோலம் போட வேண்டும்

ராகம்: காம்போதி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை காராமணி சுண்டல்

மந்திரம்: மகா வாராகி பாடலின் 15வது பாசுரம் மிகவும் சிறப்பானது

ஐயும் கிலியும் என்று தொண்டர் போட்ற அரியபச்சை

மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்

கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே

வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்க்கொடியே

பலன்கள்: பயம் நீக்கும், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் காணாமல் போவார்கள்

நவராத்திரியின் மூன்றாம் நாளில், வாராஹி அம்மனையும், இந்திராணி தேவியையும் வணங்கலாம். வாராகி அம்மன், அசுரனை அழித்த கோலத்தில் காட்சி தருவார். இந்த நாளில், நீல நிற மலர்கள், கருந்துளசி ஆகியவற்றை அம்பாளுக்கு அர்ச்சித்து வழிபடுபது சிறப்பு. தைரியத்துக்கு உரித்தான வாராஹி அம்மனை வழிபட்டால், மன குழப்பம், இனப் புரியாத பயம், சஞ்சலம் ஆகியவை நீங்கும். எதிரிகள் காணாமல் போவார்கள்.

இந்திராணி தேவி, சப்த கன்னியர்களில் ஒருவர். வெள்ளை யானை இவரது வாகனம். இந்திராணியை வணங்கினால், சொத்து சேரும் மற்றும் உயர் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

Also Read : அருள் தரும் நவராத்திரி நாள் 1: பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்கள் இதோ...!

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

இன்று வாராஹி ஸ்லோகத்தை, அவருக்கான 32 மாலைகள் உள்ள கவசத்தை பாராயணம் செய்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். வாராஹி அம்மனின் திருவுருவப்படம் இல்லை என்றால், அம்மன் படத்துக்கு மாலை சாற்றி வழிபடலாம்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், பூக்கோலம் இட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

புதன் கிழமை வாராகிக்கு மிகவும் உகந்த நாள், கடன் தொல்லை நீங்கவும், கண் திருஷ்டி விலகவும், இன்று வாராகியை வீட்டில் வழிபாடு செய்து, வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.

Also Read : அருள் தரும் நவராத்திரி நாள் 2 : பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்!

பூஜைக்கான நேரம்:

காலை 9 மணிக்குள்

மாலை 6 மணிக்கு மேல்

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைக் குறிக்கிறது. ஆனால், இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். அகண்ட தீபம் என்று நீங்கள் அணையா விளக்கு. நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம். காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Navaratri