Home /News /spiritual /

நவராத்திரி 2022 | எல்லாரும் கொலு வைக்கலாமா, முதல் முறையாக கொலு வைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.!

நவராத்திரி 2022 | எல்லாரும் கொலு வைக்கலாமா, முதல் முறையாக கொலு வைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.!

நவராத்திரி 2022

நவராத்திரி 2022

Navaratri 2022 | எல்லோரும் கொலு வைக்கலாமா, கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் முதல் முறையாக கொலு வைக்கும் போது என்ன செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புரட்டாசி மாதம், அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் நவராத்திரி தொடங்கி பத்தாவது திதியான தசமியில் முடியும். இந்தியா முழுவதுமே வெவ்வேறு மாநிலங்களில் நவராத்திரி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். கொலு என்பது நவராத்திரியின் ஒரு அங்கமாகும். வீடுகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் கொலு வைக்கப்படும். ஒரு சிலருக்கு பாரம்பரியமாக தங்கள் வீட்டில் நவராத்திரிக்கு கொலு வைத்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அவரவர் வசதிக்கு ஏற்றவாறு 3 முதல் 11 படிகள் வைத்து நவராத்திரியை கொண்டாடுவர். ஆனால், முந்தைய தலைமுறையினரிடம் அவ்வாறு கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட தற்போது கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாட விரும்புகிறார்கள்.

என்னுடைய அம்மா கொலு வைக்கவில்லை, நான் வைக்கலாமா, அல்லது என்னுடைய அம்மா வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இருந்தது, கணவர் வீட்டில் இல்லை நான் என்ன செய்வது, கொலு வைக்கும் பழக்கம் எங்கள் சமூகத்தில் இல்லை ஆனால் எனக்கு விருப்பம் இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.

எல்லோரும் கொலு வைக்கலாமா, கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் முதல் முறையாக கொலு வைக்கும் போது என்ன செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.



இது வரை கொலு வைக்காதவர்கள், எப்படி கொலு வைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

ஒன்பது நாட்களுமே சக்திதேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வணங்கி வழிபடுகிறோம். லட்சுமி சரஸ்வதி பார்வதி என்று முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால், அம்பாளை மனதார வேண்டிக் கொண்டு நீங்கள் கொலு வைக்க தொடங்கலாம்.

முதல் முறையாக கொலு வைப்பவர்கள் அவரவர் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, மற்றும் அம்பாளை மனதில் வேண்டிக்கொண்டு ₹1 நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து, கொலு வைக்கத் தொடங்கலாம். எந்த தடையும் வராமல் நவராத்திரி வழிப்பாட்டை சிறப்பாகத் தொடங்கி முடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொலு வைக்கத் தொடங்கலாம்.

Also Read : நவராத்திரி - 9 நாட்கள்.. 9 நிறங்கள்.. அன்னை பராசக்தியின் 9 அவதாரங்கள்.!

கொலு வைக்கும் பாரம்பரிய முறை தெரியாது என்றால், அதைப் பற்றி தெரிந்த தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த படிக்கட்டில் எந்த பொம்மைகள் வைக்க வேண்டும் என்று வழிமுறைகள் உள்ளது. அதாவது ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் மற்றும் கடவுள் என்று வரிசையாக கீழிருந்து மேலாக பொம்மைகளை அடுக்க வேண்டும்.

கொலு வைப்பதற்கு வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கிழக்கு மேற்காக, கொலு பொம்மைகள் கிழக்கு திசையை பார்த்தவாறு கொலுப்படிகட்டுகளை அடுக்க வேண்டும்.



கொலுப் படிக்கட்டுகள் தயாராக கடைகளில் கிடைக்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய வசதிக்கு ஏற்ப, நீங்கள் விரும்புவதற்கேற்ப மூன்று முதல் 9 படிக்கட்டுகள் வரை வாங்கிக் வாங்கலாம். முதல் முறையாக கொலு வைப்பவர்கள் எடுத்த உடனேயே மிக பிரம்மாண்டமான அளவில் செய்வதை தவிர்த்து எளிமையாக தொடங்கலாம்.

Also Read : நவராத்திரி நாட்களில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது?

கொலுவில் வைக்க மண் பொம்மைகளை வாங்க வேண்டும். கொலு பொம்மைகளில் மும்மூர்த்திகள், முப்பெரும் தேவிகள், விநாயகர், முருகர் உள்ளிட்ட பல்வேறு கடவுளின் பொம்மைகள் இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். இவற்றை அவசியமாக கொலுவில் வைக்க வேண்டும். இதை தவிர்த்து நீங்கள் விரும்பும் பொம்மைகளை வாங்கி வைக்கலாம்.

பொம்மைகளுக்கு அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது கலசம். வெள்ளி அல்லது பித்தளை சொம்பில் கலசம் தயாரித்து அதையும் கொலுவில் வைக்க வேண்டும்.

Also Read : நவராத்திரி கொலு வைப்பது எப்படி.? எத்தனை படிகள் முதல், என்ன பொம்மைகளை வைக்கலாம் என்பது வரை.!

எல்லோரும் கொலு வைக்கிறார்கள் நானும் இந்த நவராத்திரிக்கு கொலு வைக்க வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை, ஆசையை நிறைவேற்ற கொலு வைத்தால் மட்டும் போதாது. ஒன்பது நாட்களுமே தவறாமல் சிரத்தையாக, ஒவ்வொரு வேளையும் நைவேத்யம் தயாரித்து, பூஜை செய்ய வேண்டும்.



தினமும் காலையில் மாலையில் கொலுபடிக்கு கீழே விளக்கேற்றி நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனிப்பு மற்றும் சுண்டல் வகையை எந்த மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்ய வேண்டும். அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள், அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு அம்மனுக்கு படைத்த பிரசாதத்தை வழங்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Navaratri

அடுத்த செய்தி