• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • நவகிரக தோஷத்தை போக்க சில வழிமுறைகள்...

நவகிரக தோஷத்தை போக்க சில வழிமுறைகள்...

நவகிரகங்கள்

நவகிரகங்கள்

நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழி முறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். வாங்க அதனை பற்றி தெரிந்துக் கொள்வோம்...

 • Share this:
  நவ கிரகங்களினால் தோஷங்கள் இருந்தால் பலருக்கும் காரிய தடைகள் ஏற்படும். தொழிலில் எதை தொட்டாலும் நஷ்டமாகவே இருக்கும். இந்த தோஷங்கள் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

  சில பொதுவான பரிகாரங்கள்

  1. வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே ருசிப்பவர்கள் அதைக்கண்டு துவண்டு விடாமல் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். இல்லாதவர்களுக்கும் பசியோடு இருப்பவர்களுக்கும் தானம் செய்தால் உங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறையும். சனிக்கிழமையில் அன்னதானம் செய்வதன் மூலம் நவ கிரக தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

  2. காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுக்க வேண்டும். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

  3. நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும். தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

  4. கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும். கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

  மேலும் படிக்க... நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக அருள்பாலிக்கும் ஒரே கோவில் இதுதான்...

  5.வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் ஜெபிப்பதும் புதன் பலத்தைக் கூட்டும். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

  6. வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

  நவக்கிரகங்கள் அருள் புரியும் தலங்கள்... முழு விபரம்...


  மேலும் படிக்க... சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

  7. பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும் என்பது ஐதீகம்.

  8. 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

  9. பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

  மேலும் படிக்க... நவக்கிரகங்கள் அருள் புரியும் தலங்கள்... முழு விபரம்...

  10. அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

  11. சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

  12.வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

  மேலும் படிக்க... நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: