முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தைப்பூசம் திருவிழா: பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்!

தைப்பூசம் திருவிழா: பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்!

பழனி முருகன்

பழனி முருகன்

Palani temple Thirukalyanam | பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆறாம் நாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani, India

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29 ம் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நாளை மாலை 4 மணிக்கு மேல் நான்கு ரத வீதியில் நடைபெற உள்ளது.

தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை, காரைக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. பக்தர்கள் மலை மீது சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வரும் வகையில் படிவழிப்பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் யானை பாதை வழியாக மலைமீது செல்லவும், படிபாதை வழியாக கீழே இறங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Murugan, Palani