• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்...

புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்...

perumal

perumal

பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை.

  • Share this:
    புரட்டாசி மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது கோவிந்தா என்னும் திருநாமமே. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் எளிய மக்களும் பெருமாளுக்குகந்த திருநாமங்கள் இட்டுக்கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து பெருமாள் கோயில்கள் சென்று வழிபடுவர்.

    பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இந்து மக்கள் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள். இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு. புண்ணியங்கள் மிகுந்த இந்தப் புரட்டாசி மாதத்தின் சிறப்புகளையும் நெருக்கடியான இந்தக் கொரோனா காலகட்டத்தில் வழிபாடுகளை ஒட்டிக் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க...

    புரட்டாசி மாதத்தைக் கன்னி மாதம் என்று சொல்வார்கள். சூரியன் கன்னிராசியில் சஞ்சரிக்கும் மாதம். கன்னி ராசிக்கு அதிபதி புதபகவான். புதபகவானுக்கு அதிபதி திருப்பதி வேங்கடவன். புதபகவான் கன்னி ராசியில் உச்சமடைவார். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் பிறக்கும்போது புதபகவான் கன்னிராசியில் சஞ்சரித்து உச்சமடைந்திருந்தார். எனவே புதபகவானின் அருளைப் பெற நாம் ஏழுமலையானக் கட்டாயம் வழிபட வேண்டும்.

    பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை. சகல தோஷங்களையும் நீக்கும் வழிபாடாக ஏழுமலையான் வழிபாடு விளங்குகிறது.இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்...

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்தமுறை கொரோனாவால் ஆலய வழிபாடுகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தோடு ஆலயம் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபடலாம்.

    மேலும் படிக்க... பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்...

    புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

    வீட்டில் நாம் செய்யும் பூஜைகளுக்கு உகந்த பொருள்களைக் கடைகளுக்குச் சென்று வாங்கும்போதும் கவனம் தேவை. முடிந்தவரை பல இடங்களுக்குச் சென்று பொருள்களை வாங்காமல் ஒரிரு இடங்களில் வாங்கிக் கொள்ளலாம். அப்போதும் மாஸ்க் சானிடைசரை மறக்க வேண்டாம். எப்போதுமே சமுக இடைவெளியை கடைபிடிப்பது நமக்கும் மற்றவ்ர்களுக்கும் நல்லது...

    இந்த புரட்டாசி மாதத்தில் பிட்சை எடுத்து பெருமாளுக்கு தளிகை போடுவது வழக்கம். அப்படி பிட்சை எடுக்கும் போதும் போடும் போதும் இருவருமே கவனமாக இருத்தல் நல்லது. பெருமாளைன் அருள் இருவருக்குமே கிடைக்கும்.

    .

    மேலும் படிக்க... தீராத கடனும் தீர காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றி வழிபடுங்கள்...

    பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்..

    புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: