Home /News /spiritual /

மொஹரம் பண்டிகை: பாரம்பரிய வரலாற்றை கொண்ட ஆஷூரா தினத்தின் கதை!

மொஹரம் பண்டிகை: பாரம்பரிய வரலாற்றை கொண்ட ஆஷூரா தினத்தின் கதை!

மொஹரம் பண்டிகை

மொஹரம் பண்டிகை

புராணங்களின் படி, மெக்காவில் இஸ்லாமியம் தொடர்பான செய்தியைப் பரப்ப அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹஜ்ரத் அலியின் மகனும் நபியின் பேரனுமான இமாம் ஹுசைன் இஸ்லாமிய தூராக மதத்தின் புனிதத்தை பரப்ப தொடங்கினார். மேலும் மொஹரம் 10 வது நாளில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

  இந்தியாவில் மொஹரம் மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆஷுரா நாளாகும். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள்.  மதீனாவில் நபிகளாரும் முஸ்லிம்களும் மொஹரம் மாதத்தின் பத்தாவது நாள் ஆஷூரா நோன்பிருந்த சமயத்தில்தான் யூதர்களும் நோன்பு வைக்கிறார்கள் என்ற ஒரு சங்கதி தெரிய வந்தது. இஸ்லாமிய இறைத்தூதர்களை இம்சித்து கொலை செய்யும் யூதர்கள் வெற்றுச் சடங்காக நோன்பை வைத்து திருப்தியடைவதை பார்த்தபோது, அவர்களைவிட பல மடங்கு உண்மையான விசுவாசத்துடன் நபி மூஸாவை நேசித்து மரியாதை செய்கின்ற தாமும் முஸ்லிம்களுமே, எனேவ இந்நோன்பை அதிக விருப்பத்துடன் அனுசரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நபிகளார் வந்தார்.

  அதே சமயம், அவர்களுக்கு ஒப்பாக தம்முடைய வழிபாட்டை நடத்துவதில் உடன்பாடு அற்றவர்களாகவும் இருந்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் நோன்பை வழிமுறை நபிகள் உருவாக்கினார். ஆஷூரா என்றால் பத்தாவது நாளைத்தான் குறிக்கும் என்றாலும், `இனி ஒன்பதிலும் நான் நோன்பு நோற்பேன்’ என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து முஸ்லிம்கள் ஆஷூரா நோன்பை இரண்டு நாள்களாக அனுசரிக்க இதுவே காரணம்.

  மொஹரம் 2021: வரலாறும் முக்கியத்துவமும்

  மொஹரம் வரலாறு 1443 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்கள் கிமு 622 இல் மொஹரம் முதல் நாளில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புராணங்களின் படி, மெக்காவில் இஸ்லாமியம் தொடர்பான செய்தியைப் பரப்ப அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹஜ்ரத் அலியின் மகனும் நபியின் பேரனுமான இமாம் ஹுசைன் இஸ்லாமிய தூராக மதத்தின் புனிதத்தை பரப்ப தொடங்கினார். மேலும் மொஹரம் 10 வது நாளில் அவர் கொல்லப்பட்டார்.

  இந்த நிலையில் அவர் மறைந்ததை குறிக்கும் வகையில் ஆஷுரா தினம் அனுசரிக்கப்படுகிறது. கி.பி 680 ஆஷுரா நாளில் கர்பலா போரில் அவர் வீரமரணம் அடைந்தார். மொஹரம் மற்ற இஸ்லாமிய பண்டிகைகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் இது துக்கம் மற்றும் பிரார்த்தனை சார்ந்த ஒரு மாதம் ஆகும். இந்த தினத்தில் கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது. ஷியா முஸ்லிம்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானது.

  ஷியா முஸ்லீம்கள் ஹுசைனின் மரணத்திற்கு சங்கிலி அமைத்து தங்களை அடித்து துன்புறுத்தும் போது, ​​தத்பீர் அல்லது கமா ஜானி என்று அழைக்கப்படுகிறார்கள், சுன்னி முஸ்லிம்கள் இன்றைய தினத்தில் விரதம் இருந்து தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு "யா ஹுசைன்" அல்லது "யா அலி" என்று கோஷமிடுவர்.

  மேலும் படிக்க... 

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Muslim, Occasion of muharram, Temple

  அடுத்த செய்தி