• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Motivational story : அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? - கதை சொல்லி விளக்கிய விவேகானந்தர்

Motivational story : அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? - கதை சொல்லி விளக்கிய விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

மன்னா, பிச்சைக்காரரிடம் நான் எதையும் பெறுவதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார் முனிவர்.

  • Share this:
    மன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் மிகவும் மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது ஒன்றை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளுமாறு முனிவரிடம் வேண்டினான்.

    முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன, இக்குகையிலே நான் தூங்குகிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நீ மன்னாதி மன்னனாக இருந்தாலும், நான் ஏன் உன் நன்கொடைகளை பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். மன்னனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறவேண்டும். நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெற வேண்டும். நகருக்குள் என்னோடு வரவேண்டும் என்றும் வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார்.

    அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருப்பதை முனிவர் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் நிறைந்திருந்தன. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு ஓரமாகச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.

    Read More : ‘பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணி உதவ வேண்டும்’ - சிறுவர்களுக்கு கதை கூறிய மருள் நீக்கியார்!

    அப்போது முனிவர் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட மன்னன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள், நீங்கள் எனது நன்கொடையைப் பெறாமல் போகிறீர்களே என்று கேட்டான். முனிவர் அவனை நோக்கி, மன்னா, பிச்சைக்காரரிடம் நான் எதையும் பெறுவதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார்.

    Must Read : இதய காயங்களை இதமாகப் போக்கும் 'இனியவை கூறல்'!

    அன்பு வெளிப்படும் முறை இதுவல்ல. இறைவனிடம் இதைத் கொடு, அதைக் கொடு என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார். இந்த கதையைக் கூறி, விவேகானந்தர் இறைவனிடம் அன்பை செலுத்துங்கள் மாறாக அவரிடம் வியாபாரம் செய்யக் கூடாது என்பதை விளக்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: