ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் குவியும் பக்தர்கள்... 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்..!

சபரிமலையில் குவியும் பக்தர்கள்... 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

Sabarimala | ஆட்டோ ரிக்சா மற்றும் சரக்கு வாகனங்களில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், இருசக்கர வாகனத்தில் வருவோர் கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் அலைமோதுவதால், கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

  கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொட்டும் மழைக்கு இடையே தரிசனம் செய்தனர். இதனால், முதல் நாளான வியாழக்கிழமை மட்டும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.

  இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நண்பகல் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது தீபாராதனை, புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாழ பூஜைகள் நடைபெற்றன. இதனை திரளான பக்தர்கள் தரிசித்து, ஐயப்பனை வணங்கிச் சென்றனர்.

  Also see... சபரிமலை மண்டல பூஜை.. முன்பதிவு செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

  காலையில் பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே, பிரபல மலையாள நடிகர் திலீப்-பும் சாமி தரிசனம் செய்தார். இதனிடையே, பம்பை, நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறுவதற்கு சிரமமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். சபரிமலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தபோதும், பக்தர்கள் நனைந்தவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

  இந்நிலையில், ஆட்டோ ரிக்சா மற்றும் சரக்கு வாகனங்களில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், இருசக்கர வாகனத்தில் வருவோர் கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேரள வாகன போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

  Also see... உருவ வழிபாடு தேவையா? சத்குரு கூறுவதை கேளுங்கள்...

  இதனிடையே, சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு, கன்னியாகுமரி வழியாக திரும்பும் பக்தர்கள், திற்பரப்பு அருவியில் ஆனந்தக் குளியல் போடுகின்றனர்.

  தை மாதம் வரை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், திற்பரப்பு அருவிக்கும் வருவார்கள் என்பதால், அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala