Home /News /spiritual /

இன்று மார்கழியின் கடைசி சதுர்த்தி... விநாயகரை வணங்கினால் சகலமும் கிடைக்கும்...

இன்று மார்கழியின் கடைசி சதுர்த்தி... விநாயகரை வணங்கினால் சகலமும் கிடைக்கும்...

பிள்ளையார்

பிள்ளையார்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் சதுர்த்தி. அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுபவர்களின் சங்கடங்களைத் தீர்த்து அவர்களின் குறைகளை நீக்கி அருள் புரிவதாக விநாயகப்பெருமான் அருளாசி வழங்கினார்.

  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் சதுர்த்தி. அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுபவர்களின் சங்கடங்களைத் தீர்த்து அவர்களின் குறைகளை நீக்கி அருள் புரிவதாக விநாயகப்பெருமான் அருளாசி வழங்கினார் என்பது புராணக்கதை.

  சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சதுர்த்தி விரதம். வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு அவரை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு நான்காவது நாளன்று வரும் சதுர்த்தி ஸ்ரீமஹா கணபதி அவதரித்த திதியாகும். அதனால் இது சிறப்பு மிக்கது.

  விரதம் இருக்கும் முறை

  சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். அதன் பின்னர் தூபம், தீபம் ஏற்றி நைவேத்தியம் செய்வதுநல்லது. மேலும் அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் உணவு உண்டு விரதத்தை முடிக்கலாம்.

  மேலும் படிக்க... விநாயகர் அருளை பெற இந்த இலைகளை கொண்டு வழிபடுங்கள்...

  சந்திர தரிசனம் செய்வது நல்லது

  சதுர்த்தி அன்று சந்திர தரிசனம் செய்வது நல்லது. காரணம், பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

  பின் சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

  மேலும் படிக்க... இன்று மகாசங்கடஹர சதுர்த்தி விரதம்...

  பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து,

  "தவம் காரணம் காரண காரணாநாம்

  க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்" என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

  பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது தான் சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

  மேலும் படிக்க... தீராத வினையை தீர்க்கும் விநாயகர் மந்திரம்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ganesh Chaturti, Margazhi, Temple

  அடுத்த செய்தி