Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று பிசினஸ் அமோகமாக இருக்கும்

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று பிசினஸ் அமோகமாக இருக்கும்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 20) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்: இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். நீங்கள் எந்த திட்டத்தையும், முடிவு செய்யலாம் எந்த ஒப்பந்தத்திலும் இன்று கையெழுத்திடலாம். உங்களுக்கு சிறந்த மரியாதை கிடைக்கும். மிகப் பெரிய உற்சவங்களில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பேரும், புகழும் அதிகரிக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் நாள். புதிய திட்டங்கள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். சட்ட சிக்கல்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், அதிர்ஷ்டமும் உங்களுக்கு கை கொடுக்கும்.

மிதுனம்: இன்று மிகவும் கிரியேட்டிவான தினமாக இருக்கும். நீங்கள் முக்கிய வேலையை செய்து முடிப்பதில் இன்று முழுவதும் கவனம் செலுத்துவீர்கள். அதன் பின்பு நீங்கள் நிதானமாக ஓய்வெடுக்கலாம். புதிய திட்டங்களும் உங்கள் மனதில் தோன்றலாம் அதற்கு உங்கள் மேலதிகாரியின் ஆதரவும் கிடைக்கும்.

கடகம்: நீங்கள் அர்பணிப்போடு செய்யும் எந்த விஷயமும் உங்களுக்கு நல்ல பலனை கடுக்கும். இதுவரை முடிக்காத வேலைகளை எல்லாம் இன்று செய்து முடிப்பீர்கள். முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிப்பீர்கள். உங்கள் அலுவலக சூழல் நீங்கள் விரும்பும் படி இருக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாகத்தான் இருக்கும். ஆனால் கோவில், ஆன்மிகம் என்று வரும் பொழுது அதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஆலயங்களுக்கு செய்து வழிபட்டு வருவது நல்லது. அலுவலகத்தில் உங்களுடைய மேலதிகாரிகள் உங்கள் வேலைக்கு தடையாக இருக்கக்கூடும்.

கன்னி: இன்று நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். எனவே உங்களை சுற்றியிருக்கும் யாரோடும் நீங்கள் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடாதீர்கள். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் நீங்கள் தீர்வு காணலாம். ஒருசிலர் புதிய திட்டங்களில் பணியாற்ற தொடங்கலாம். சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:  இன்று பொருளாதார ரீதியாக உங்களுக்கு சாதகமான நாள். லாபம் ஈட்டுவதற்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். எனவே எந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள். வேலையில் புதிய மாற்றங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக மாறும்.

தனுசு: எச்சரிக்கை மற்றும் கவனம் தேவைப்படும் நாள். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால், நல்ல லாபம் கிடைக்கும். தினசரி வேலைகளை விட, வேறு ஏதேனும் புதிதாக செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்: இன்று ஒரு சாதாரண நாள். இந்த நாள் உங்களுக்கு இயல்பாக செல்லும். ஆனால், பார்ட்னர்ஷிப் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏற்படும். எதிலும் நேர்மையாக இருப்பது அவசியம்.

கும்பம்:  பிசினஸ் செய்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக அமையும். அவசரத்தில் ஏதேனும் தவறுகள் நேரலாம். எனவே கொஞ்சம் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள்.

மீனம்: இன்று உங்களுக்கு நன்மையான நாள். வணிகம் செய்பவர்கள் ரிஸ்க் எடுத்தால் நல்ல பலன்களை பெறலாம். பொறுமையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
Published by:Vijay R
First published:

Tags: Rasi Palan

அடுத்த செய்தி