ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 17, 2022) முதலீடுகள் லாபகரமானதாக அமையும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 17, 2022) முதலீடுகள் லாபகரமானதாக அமையும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பல காலமாக மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் விஷயங்களை வெளிப்படுத்த சரியான தருணம் இது. காலையில் வேலையை தொடங்குவது நல்லது. இன்று நீங்கள் கோபம், சோகம், மகிழ்ச்சி என கலவலையான உணர்ச்சிகளுடன் காணப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நட்சத்திரம்

ரிஷபம்:

மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தாலும், நீங்கள் இன்னும் ஒரு மர்மமாகத் தோன்றி அவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். தற்போது நீங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஷயத்தில் வெற்றி கிடைக்கும். பழைய வாய்ப்புகளை மறுபரிசீலனை செய்ய சரியான நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பீங்கான் தொட்டி

மிதுனம்:

உங்களுக்கு நெருக்கமானவர்கள் சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். அது இயல்பானது என்பதால் கடந்து செல்ல முயற்சிக்கவும். மற்ற நபரின் நிலைமை மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும் முக்கியமாகும். இன்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நைட்டிங்கேல் பறவை

கடகம்:

“கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை” என்பார்கள், நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் கைமாத்து வாங்கியிருந்தாலோ அவர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்காலம் பற்றிய பயம் மற்றும் திட்டமிடல் காரணமாக நிகழ் கால வாழ்க்கை தொலைத்து வருகிறீர்கள். சில சந்தர்ப்பங்களில் பொறுமையாக இருப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அட்டை பெட்டிகள்

சிம்மம்:

இன்று சீனியர் அல்லது வீட்டு பெரியவர்கள் இடையிலான புரிதல் அதிகரிக்கக்கூடும். நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். உங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையும் உங்கள் மனச் சீரமைப்பும் தற்போது சூப்பர். ஆனால் நீங்கள் அடுத்த கட்டத்தை அடைய, இன்னும் சிறிது நேரம் ஆகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கம்பளிப்பூச்சி

கன்னி:

உங்கள் திறனை வளர்த்துக்கொள்ள அலுவலகத்தில் சுற்றி நடக்கும் விஷயங்களை உற்றுநோக்க வேண்டும். நெருங்கிய நண்பர்கள் சிலர் இன்று உங்களுக்கு சர்ப்ரைஸ் தர திட்டமிடலாம். உங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது, ஆனால் அதற்காக நீண்ட காலம் பயிற்சி செய்ய வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரத்தினக் கல்

துலாம்:

சில நேரங்களில் நாம் நமது சொந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், நம் எண்ணங்களைத் தவறாகப் பேசுகிறோம். நீங்கள் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியேறி, இந்த சூழ்நிலையை மனிதாபிமானமாக நினைக்கலாம். நீங்கள் இதுவரை ஆதரவை வெற்றிகரமாக நிர்வகித்திருந்தால், அதுவே எதிர்காலத்திற்கான உத்வேகமாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காஸ்ட் அயர்ன் பாத்திரம்

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த ஒருவரை எதிர்பாராதவிதமாக சந்திக்கக்கூடும். கடந்த காலத்தில் நீங்கள் ஏதாவது காயப்படுத்தியிருந்தால், அதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. அதனால் உங்கள் மனதிற்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பூங்கா

தனுசு:

இன்றைய தினம் பிரகாசமாகவும், உங்களுக்கு சாதகமாகவும் இருக்கும். நிலுவையில் உள்ள பணி, நீண்ட காலமாக மறந்துவிட்ட வேலைகளின் பட்டியல் அனைத்தும் முடிக்க திட்டமிடலாம். வீட்டுப் பொறுப்புக்களுக்கு நேரம் ஒதுக்க நேரிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சாமந்தி பூ

மகரம்:

உங்களுடன் பணியாற்றும் ஜூனியர் ஒருவர், ஏதாவது புகாரை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தால், அதனை உடனடியாக தீர்த்து வைக்கவும். பங்குச்சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவருக்கு, முதலீடுகள் லாபகரமானதாக அமையும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் அடையாளம்

கும்பம்:

நீண்ட தூரத்தில் விலகி இருக்கும் காதல் அல்லது திருமண உறவில் சிக்கல் ஏற்படலாம், ஆனால் அது தற்காலிகமானது விரைவில் சரியாகும். வேலையில் மன அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம், இதனைத் தவிர்க்க நல்ல இசையை கேட்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு குறுகிய பயணத்திற்கும் திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரெட்ரோ இசை

மீனம்:

உங்கள் குரூப்புடன் சேர்ந்து எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அதனை இப்போது செய்யலாம். நீண்ட நாட்களாக தள்ளிப்போனதாகத் தெரிகிறது. நிதிநிலை ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி கதவு

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks