Home /News /spiritual /

செல்வ வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று (26 ஜூலை 2022) நிதி பரிவர்த்தனை லாபகரமாக இருக்கும்

செல்வ வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று (26 ஜூலை 2022) நிதி பரிவர்த்தனை லாபகரமாக இருக்கும்

செல்வ வாக்கு

செல்வ வாக்கு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 26) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

    மேஷம்

    வெளிநாட்டு முதலீடுகள் உங்களுக்கு அதிக லாபத்தை தரும். துணி வியாபாரிகளுக்கும் இன்று நல்ல லாபம் கிடைக்கும். பழைய நிதி நெருக்கடிகளில் இருந்து உங்களுக்கு இன்று நிவாரணம் கிடைக்கும். பணம் தொடர்பான அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.

    ரிஷபம்

    இன்று உங்களின் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நிதி பரிவர்த்தனைகள் லாபகரமாக இருக்க உங்களின் தனி திறமைகளை பயன்படுத்த வேண்டும். தனி நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். நீங்கள் விரும்பும் நபருடன் இன்று பயணம் செய்யலாம். மகிழ்ச்சியான நாளாக இருக்க மன நிம்மதி அவசியம். இன்றைக்கு உங்களின் தந்தை பல வகையில் நிதி உதவியாக இருப்பார்.

    மிதுனம்

    இன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பெரிய அளவில் பலனளிக்கும். அறிமுகமானவர்களுடன் இணைந்து தொழில் தொடங்க நினைத்தால் இன்றைய நாள் மிக சிறந்த தேர்வாகும். தந்தை வழி சொத்துக்கள் லாபகரமாக அமையும். இன்று நீங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு உதவுவீர்கள்.

    கடகம்

    உங்கள் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இன்று ஒரு புதிய தொழிலைத் தொடங்குங்கள். இது மிகவும் லாபகரமானதாக மாறும். இரும்பு, எஃகு தொழில் செய்பவர்கள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். வீடு மற்றும் குடும்ப செலவுகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒரு சர்வதேச பயணத்தை திட்டமிடலாம். இருப்பினும், இது உங்கள் பட்ஜெட்டை மோசமாக பாதிக்கவும் செய்யும். எனவே கவனமாக இருங்கள்.

    சிம்மம்

    இன்று வணிகங்களில் அதிக லாபம் இருக்காது. எந்தவொரு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் இன்று முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், இது நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். உங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் இன்று உங்களுக்கு உதவியாக இருப்பார். அன்றாடச் செலவுகள் அதிகரித்து வருவதால் மன அழுத்த உருவாகலாம். நிம்மதியான வாழ்வை பெற யோகா செய்து வரலாம்.

    கன்னி

    இயந்திரம் தொடர்பான தொழில்கள் இன்று சாதகமான ஏற்றத்தை பெறும். பல நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணத்தை இன்று திரும்பப் பெறலாம். நீங்கள் அலுவலக வேலையில் இருப்பவராக இருந்தால், சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க திட்டமிடலாம். வெளிநாட்டு வர்த்தகமும் இன்று உங்களுக்கு லாபகரமாக இருக்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான வேலைகள் பணம் சார்ந்த விஷயத்தில் சிக்கல் ஏற்படும்.

    துலாம்

    வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால், இன்று உங்கள் கனவு இல்லத்திற்கு ஒப்பந்தம் செய்யலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டில் உறவுகளில் சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு. வீட்டுச் செலவுகளும் அதிகரிக்கும். எனவே இன்று அதிக கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் உடன்பிறந்தவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டி இருக்கலாம்.

    விருச்சிகம்

    உணவு தொடர்பான தொழில்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். இன்று பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் நண்பருக்கு உதவுங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணம் நஷ்டத்தை பெறலாம். நெருங்கிய நபருடன் கடன் தொடர்பான மோதல்கள் உருவாகலாம்.

    தனுசு

    இன்று முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்களுக்கு நிதி உதவி செய்வார். அந்த உதவியை பெற்று முன்னேற்றத்தை பெற முயற்சியுங்கள். இன்று முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது, முதலீடுகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினசரி வருமானம் மனச்சோர்வை ஏற்படுத்தும். தனியார் தொழில்களில் சிறு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மகரம்

    துணி வியாபாரிகள் தங்களிடம் சிக்கிய பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்படும். நீங்கள் இன்று கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்களது கஷ்டத்தை உணர்ந்து உங்கள் தாய் உங்களுக்கு நிதி உதவி செய்வார். உங்களின் வருமான ஆதாரத்தை பற்றிய சிந்தனை உருவாகும். நெருங்கிய நண்பர்கள் உங்களின் நிதி வளர்ச்சிக்கு உதவும் வழிகளை கூறுவார்கள்.

    கும்பம்

    இன்று உங்களின் காதலிக்காக அதிக செலவு செய்ய வேண்டி வரும். உங்களின் குடும்பத்தில் இன்று பொருளாதார இழப்புகள் ஏற்படலாம். சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தோன்றலாம். நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழிலை தொடங்குவது உங்களுக்கு அதிக செல்வத்தைத் தேடி தரும். எதிர்பாராத பயணம் உங்கள் வரவு செலவுத் திட்டத்தை பாதிக்க கூடும்.

    மீனம்

    உங்களின் தினசரி வருமானம் திருப்திகரமாக இருக்காது. எனவே இன்று உங்களின் நண்பரிடம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்களின் திடீர் பயணங்களால் பண நெருக்கடிகள் ஏற்படும். எனவே இது போன்ற பண பிரச்சனைகளை சமாளிக்க தொழிலை மேம்படுத்த வேண்டியது அவசியம். இன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி