Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்றைக்கு (21 ஜூலை 2022) நிதி லாபங்களை எதிர்பார்க்கலாம்

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்றைக்கு (21 ஜூலை 2022) நிதி லாபங்களை எதிர்பார்க்கலாம்

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 21) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

இன்றைய தினம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணருவீர்கள். கையில் பெரும் அளவிலான பணம் கிடைப்பது நிம்மதியை தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கவும்.

ரிஷபம்:

இன்று உடல் நலனுக்கு ஆகாது. ஆகவே கார, சாரமான மசாலா கலந்த உணவுகளை தவிர்க்கவும். லேசான உணவு வகைகளை சாப்பிடவும். சோம்பல் காரணமாக அலுவலக வேலை ஓடாது. மனதில் அதிக கவலைகள் இருப்பது நல்லதல்ல.

மிதுனம்:

இன்று மிக முக்கியமான ப்ராஜக்ட் தொடங்குவது குறித்து நீங்கள் சிந்திப்பீர்கள். அதை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஓராண்டு பிடிக்கும். இன்றைக்கு நிதி லாபங்களை எதிர்பார்க்கலாம். உடல் நலன் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களை புறக்கணிக்க கூடாது.

கடகம்:

உங்களுக்கு மிகுந்த நன்நாளாகவும், அதிர்ஷ்டம் மிகுந்த நாளாகவும் இது இருக்கும். வாழ்வில் வளங்கள் மற்றும் பலன்கள் கிடைக்கக் கூடிய திசை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள். புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் மற்றும் பணம் ஆகியவை கிடைத்தவுடன் அதை முன்னெடுத்துச் செல்லலாம்.

சிம்மம்:

பிறருடன் நீங்கள் கடைப்பிடிக்கும் நட்புறவு இன்று இனிமையானதாக இருக்கும். அலுவலகத்தில் அனைத்து விதமான ஆதரவும் கிடைக்கும். மாலையில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படக் கூடும். இரவில் பரிசு கிடைக்கலாம்.

கன்னி:

அலுவலகத்தில் அனைத்து பணியாளர்களிடம் இருந்தும் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றியாளராக உணருவீர்கள். பெரிய நபரின் உதவியால் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

துலாம்:

கோபத்தை இன்று கட்டுப்படுத்த வேண்டும். வணிகத்தில் இன்றைக்கு உங்களுக்கு புதிய பார்ட்னர்ஷிப் தேவைப்படும். வெற்றி உங்கள் காலடியை தேடி வரும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மாலையில் பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்:

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இன்றைக்கு தொந்தரவு ஏற்படக் கூடிய நாள் ஆகும். இருப்பினும், தொழில்முறை வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவீர்கள். பணியிடத்திலும், குடும்பத்திலும் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்கின்ற போதிலும் அதை சமாளித்து விடுவீர்கள்.

தனுசு:

உடல் நலன் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் மற்றும் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆற்றலை வீணடிக்க வேண்டாம். சமூகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மகரம்:

வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்கள் இன்று நடைபெற இருக்கின்றன. அதன் மூலமாக நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இருளுக்கு அருகாமையில் தான் வெளிச்சம் கிடைக்கும் என்பதை மனதில் வையுங்கள். உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

கும்பம்:

கும்ப ராசியின் கடவுளான சனி பகவானின் அருளும், ஆசியும் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். இன்றைக்கு பணம் சார்ந்த லாபங்கள் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எந்த வேலையையும் செய்யும் முன்பாக நன்றாக யோசிக்கவும்.

மீனம்:

உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அதே சமயம், உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகவில்லை என்று நீங்கள் அதிருப்தி அடைவீர்கள். ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் அனைத்து சமயங்களிலும் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Rasi Palan

அடுத்த செய்தி