ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

உங்கள் மொபைல் நம்பருக்கான எண் கணிதம்.!

உங்கள் மொபைல் நம்பருக்கான எண் கணிதம்.!

மொபைல் எண் கணிதம்

மொபைல் எண் கணிதம்

Mobile Numerology | உங்கள் மொபைல் எண்-ஐ மாற்றுவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் மற்றும் பணி சார்ந்து நீங்கள் விரும்பிய வளர்ச்சியை எட்ட முடியும். ஆகவே தான், உங்கள் பிறந்த நாளுக்கு ஏற்ப, மொபைல் எண் தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மொபைல் ஃபோன் உங்கள் கையில் எப்போதும் இருக்கிறது. சில சமயம், உங்கள் குடும்பத்தினர் அல்லது லேப்டாப் விடவும் நீங்கள் மொபைலுடனே அதிக நேரம் செலவிடுகிறீர்கள். மொபைல் ஃபோன்களை கொண்டு தன் வாழ்க்கையில் ஒருவர் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது மற்றும் சாதனைகளை செய்ய முடிகிறது.ஆனால், இதெல்லாம் எப்போது சாத்தியம்? தான் விரும்பிய மொபைல் எண் அவரிடம் இருக்க வேண்டும். ஒவ்வொரு தேவைகள் சார்ந்தும், சில மறைவான அதிர்வுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு 7ஆம் எண் என்பது ஆன்மீகம் சார்ந்த குழப்பம் கொண்ட எண் ஆக இருக்கிறது.

அதுவே 9ஆம் எண் என்பது ஒரு வரிசையின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக செயலாக்கம் தருகின்ற கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும். உங்களுக்கு தீர்வே இல்லாமல் ஒரு முடிவின்றி நீடிக்கும் சில பிரச்சினைகளுக்கும், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.

ஒரு நபருக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றால், அனைத்து கிரக சூழ்நிலைகளையும் நாம் சீராக வைத்திருக்க வேண்டும். சில சமயம், உங்கள் மொபைல் எண் காரணமாக இந்த சீரான சூழ்நிலை பாதிக்கப்பட கூடும். ஆக, எண் கணிதம் அடிப்படையில் ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களை தீர்மானிக்கக் கூடிய தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறது என்றால், முதலில் எந்த கிரகத்தின் காரணமாக அந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். அது எந்த அளவுக்கு உங்களை பாதிக்கிறது என்பதை கணக்கிட வேண்டும்.

Also Read : எண் கணித ஜோதிடம் - 31 ஆம் தேதி பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

அதே சமயம், சரியான மொபைல் எண் தேர்வு செய்தால் உங்கள் வாழ்க்கை எளிமையாகும் மற்றும் அனைத்து தடைகளும் நீங்கும். நவ கிரகங்களையும் ஒவ்வொரு எண் குறிக்கிறது. மற்றும் இந்த கிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏதேனும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இந்த எண்கள் ஒவ்வொன்றுக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. அவை ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் ராசிகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. உங்கள் குணம், திறமை, இலக்கு, பணி சார்ந்த வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை கிரகங்களே தீர்மானிக்கின்றன. அவை ஏதேச்சையாக நடப்பதில்லை.

Also Read : எண் கணித ஜோதிடம் | 23 அதிர்ஷ்டமான பிறந்த தேதி.!

ஆக, உங்கள் மொபைல் எண்-ஐ மாற்றுவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் மற்றும் பணி சார்ந்து நீங்கள் விரும்பிய வளர்ச்சியை எட்ட முடியும். எண்களில் சீரான நிலையை கடைப்பிடிப்பதன் மூலமாக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகளை அடைய முடியும். ஆகவே தான், உங்கள் பிறந்த நாளுக்கு ஏற்ப, மொபைல் எண் தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.

Published by:Selvi M
First published:

Tags: Mobile number, Numerology, Tamil News