9 இல்லாத மொபைல் எண் இருக்கிறதா என்ன? எண் கணிதத்தில் 9 ஆம் எண் என்றாலே கொஞ்சம் சுவாரஸ்யம் கூடும். இதற்குக் காரணம், 9 என்ற எண் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண்ணாகும். இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்துமே தாங்கள் வழங்கும் மொபைல் நம்பர்களில் 9 என்ற எண்ணில் தான் துவங்கியுள்ளது. எனவே, இந்த எண் முழுக்க முழுக்க செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். எனவே, 9 என்ற எண் இல்லாத மொபைல் நம்பர்கள் பயன்படுத்துவோர் மிக மிகக் குறைவு.
எண் 9- ன் குணநலன்கள்:
செவ்வாயின் ஆற்றல் ஒரு நபரை பல விதங்களில் தாக்கும்; இதில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டுமே உண்டு. உதாரணமாக, செவ்வாய் என்பது உண்மையாக இருக்கும் தன்மையைக் கொண்டது, பெரிதாக சிந்திக்கவும், பெரிய விஷயங்களுக்கு முயற்சி செய்யவும் உதவுகிறது. அதே நேரத்தில், பொறுமை குறைவு, முன் கோபம் ஆகியவையும் கொண்டது. மொபைல் எண்ணில் 9 இருந்தால், என்ன மாதிரியான தன்மை இருக்கும் என்று பார்க்கலாம்.
மொபைல் எண்ணில் 9 ஒரு முறை இருந்தால்:
தன்னுடைய ஆசைகளையும் கனவுகளையும் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று செயல்படுவார்கள். தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். கனவு காண்பது மட்டுமல்லாமல், அதை உண்மையாக்க தேவையானவற்றை செய்வார்கள். தூய்மையான சிந்தனைகள், புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல் ஆகியவை இவர்களின் பலம்.
மொபைல் எண்ணில் 9 இரண்டு முறை இருந்தால்:
எச்சரிக்கையாக, புத்திசாலியாக, ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள். இவர்களை பலரும் விமர்சிப்பார்கள். மற்றவர்களுடன் அவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள், தங்களைப் பற்றி மிக உயர்வாக நினைப்பார்கள். மற்றவர்களை விட எல்லாவற்றிலும் தான் சிறந்து விளங்குவதாக கருதுவார்கள்.
மொபைல் எண்ணில் 9 மூன்று முறை இருந்தால்:
ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்குவதில் வல்லவர்கள். எலி போல இருந்தாலும், மலையையே குடையும் தன்மை உண்டு. பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் நிறைய செலவு செய்வார்கள். மற்றவர்கள் தன்னைப் பற்றி நல்ல விதமாக என்ன வேண்டும் என்று நடிப்பார்கள், வித்தியாசமாக எதையாவது செய்வார்கள். பிறர் சொல்வதை பெரும்பாலும் கேட்க மாட்டார்கள். தனக்காக தோன்றினால் மட்டுமே, பிறருக்கு உதவி செய்வார்கள்.
மொபைல் எண்ணில் 9 நான்கு அல்லது அதற்கும் மேல் இருந்தால்:
உங்களுடைய ஆளுமையில் கொஞ்சம் எதிர்மறையான தாக்கம் இருக்கும். செவ்வாயின் அதிகப்படியான தாக்கம், உங்கள் உலகத்தை மறந்து அல்லது அதிலேயே தொலைந்து போகும் ஒரு தன்மையை ஏற்படுத்தும். உங்கள் பிரச்சனைகளை வெளியே யாரிடமும் சொல்லத் தயங்குவீர்கள். இந்த மாதிரி அமைப்பு கொண்டவர்கள், தங்களைப் பற்றி உயர்வாக மதிப்பிடுவார்கள். கனவுலகில் சஞ்சரிப்பார்கள் மற்றும் சமூகத்துடன் இணைய, பழக கொஞ்சம் தயங்குவீர்கள். இறுதியில், புரிந்து கொள்ள கடினமான நபராக தெரிவீர்கள்.
மொபைல் எண்ணில் 9 என்ற எண் இல்லை என்றால்:
நீங்கள் யார் மேலும் பரிதாபம் கொள்ள மாட்டீர்கள். கடுமையாக இருப்பீர்கள், மற்றவர்களிடம் இருந்து முழுதாக விலகியே இருப்பீர்கள். பிறரின் தேவையை காது கொடுத்துக் கூட கேட்க மாட்டீர்கள், எனவே இணக்கமாக இருக்க முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதீதமாக ரியாக்ஷன் தருவீர்கள். எனவே, வாழ்வில் நிலைத்தன்மை என்பது கனவு தான்.
மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 9 என்று இருந்தால்:
இது உங்களை மிகவும் புத்திசாலியாக ஆக்கும், மூளைத்திறன் அற்புதமாக செயல்படும். புதிய யோசனைகள், சிந்தனைகள், முறைகளை கூறி, நீங்கள் பெயர், புகழ் மற்றும் வெற்றியைப் பெறுவீர்கள். எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக செயல்படுவீர்களோ, அதே அளவுக்கு அன்பாகவும், கனிவாகவும், நல்ல நடத்தைக் கொண்டவராகவும் இருப்பீர்கள். இயல்பாகவே ஒரு நல்ல மனிதர். எண் 9 என்பது புதிய கண்டுபிடிப்புகள், புதுமை, படைப்பாற்றல் ஆகியவற்றை நோக்கி உங்களை செலுத்தும். எவ்வளவு பெருமைகள் கிடைத்தாலும் தனிமையை உணர்வீர்கள்.
மொபைல் நியூமராலாஜி
Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 5 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!
Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News