ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 8 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!

மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 8 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!

மொபைல் நியூமராலஜி

மொபைல் நியூமராலஜி

Mobile Numerology No 8 | மொபைல் நியூமராலாஜி வரிசையில், மொபைல் எண்ணில் 8 ஆம் நம்பர் இருப்பது, மற்றும் மொபைல் எண்ணின் கூட்டுத் தொகை 8 ஆக இருந்தால், என்ன பலன் என்று இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 8- ன் குணநலன்கள்:

பணி சார்ந்த வளர்ச்சி, லாபம் மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த எண் இதுவாகும். வாழ்க்கையை இது நிலையானதாக மாற்றுகிறது மற்றும் பாதுகாப்பு தருகிறது. ஒருவர் வெற்றி பெற விரும்பினால் அவர்களது மொபைல் எண்ணில் எண் 8 இருக்க வேண்டும். கடின உழைப்பு, அழிவு, மறுபிறப்பு மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவற்றை குறிக்கும் எண் இது. ஒருவர் கடினமாக உழைக்கிறார், தன்னம்பிக்கை கொண்டிருக்கிறார், திட்டமிட்டு செயல்படுகிறார் என்றால் அவருக்கு வெற்றிக்கான உத்தரவாதம் தரக் கூடிய எண் இதுவாகும். ஒருவரது மொபைல் எண்ணில் 8 இருந்தால், அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு செய்வார். எந்தவொரு வேலையிலும் சாதகமான விஷயம் என்ன இருக்கிறது என்பதையே முதலில் ஆய்வு செய்வார். அதற்குப் பிறகுதான் பாதகமான விஷயத்தை பார்ப்பார்கள். மற்றவர்களை நம்புவதைக் காட்டிலும் அவரது சொந்த திறன் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்.

எண் 8 ஒருமுறை வந்தால்:

இந்த அமைப்பில் மொபைல் எண் கொண்ட ஒருவர் நிதி மேலாண்மையில் சிறந்து விளங்குவார். பணத்தை கவனமாக கையாளும் இவர்கள், அதை சாதுர்யத்துடன் செலவு செய்வார்கள். அடுத்த நபர் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை இவர்கள் செய்ய மாட்டார்கள். முழு திட்டமிடல்களுடன் இவர்கள் செயல்படுவார்கள்.

எண் 8 இருமுறை வந்தால்:

ஒருவரது மொபைல் எண்ணில் எண் 8 இருமுறை வந்தால், அவர்கள் மிகுந்த கோபக்காரராக இருப்பார்கள். இந்த நபர்கள் தங்களது நடத்தை குறித்து கவனமாக இருக்க வேண்டும் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மிகுந்த பிடிவாதக்காரராக உள்ள இவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இவர்கள் தங்களுடைய சொந்த அனுபவத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள நினைக்கின்றனர் மற்றும் பிறர் மீது நம்பிக்கை வைப்பதில்லை. தங்களுடைய முடிவுகளையும் இவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். பெயர், புகழ் குறித்து சிந்திப்பதிலேயே இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

எண் 8 மூன்று முறை வந்தால்:

ஒருவரது மொபைல் எண்ணில், எண் 8 மூன்று முறை வந்தால், அவர்களது வாழ்க்கையின் தொடக்க காலங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த நபர்கள் காரியவாதிகளாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு 40 வயது கடந்து விட்டால் சொத்துக்களின் மீதுதான் இவர்களது மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். மேலும் திமிர் உடையவராக மற்றும் கோபம் கொள்பவராக மாறி விடுவார்கள். இறுதியாக பேராசை கொண்டவர்களாக மாறும் இவர்கள், நிலையான குணாதிசயத்தை கடைப்பிடிக்க முடியாது.

எண் 8 என்பது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை வந்தால்:

இவர்கள் நிலையற்றத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் கூடுதலாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பார்கள். சொத்து மற்றும் வளத்தை நோக்கி இவர்களது வாழ்க்கை பயணம் திரும்பினால் அது குறித்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைவார்கள். பணம் தொடர்புடைய விஷயங்களில் பிற மக்களிடம் கெட்ட பெயர் பெற்றவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

எண் 8 இல்லை என்றால்:

பணம் தொடர்பான விஷயங்களில் பாதுகாப்பின்மை நிலவுவதையே இது குறிக்கிறது. உங்கள் மொபைல் எண்ணில் 8 இல்லை என்றால் உங்கள் சொந்த வாழ்வில் இருந்து நீங்கள் திசைதிரும்பி விடுவீர்கள் அல்லது பிற நபர்களுடன் சண்டை செய்ய நேரிடும். பணம் இருந்தாலும், தேவையற்ற விஷயங்களில் இவர்கள் செலவு செய்வார்கள். பட்ஜெட் போடுவதுதான் இவர்களது பெரும் பிரச்சினையாக இருக்கும். பணம் மற்றும் அறிவு விஷயத்தில் எப்போதுமே பிறரை சார்ந்து இருப்பார்கள்.

கூட்டு எண் 8ஆக இருந்தால்:

வாழ்க்கையில் ஒருவரை கடின உழைப்பு நோக்கி இந்த எண் நகர்த்தும். கல்வி சார்ந்த விஷயங்களில் வெற்றியாளர்களாக இருப்பார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். லாபம் ஈட்டும் திறனை இது மேம்படுத்துகிறது மற்றும் பணம் கையாளும் விஷயத்தில் திறமையுடன் செயல்படுவார்கள். ஆனால், லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கையில் இவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் என்றாலும், கடின உழைப்பால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

மொபைல் நியூமராலாஜி

Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 4 ஆக இருக்கிறதா.? அப்போ இந்த குணாதிசயங்கள் நிச்சயம் இருக்கும்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 5 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!

Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!

First published:

Tags: Numerology, Tamil News