ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!

மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!

மொபைல் நியூமராலஜி

மொபைல் நியூமராலஜி

Mobile Numerology No 6 | மொபைல் நியூமராலாஜி வரிசையில், மொபைல் எண்ணில் 6 ஆம் நம்பர் இருப்பது, மற்றும் மொபைல் எண்ணின் கூட்டுத் தொகை 6 ஆக இருந்தால், என்ன பலன் என்று இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 6- ன் குணநலன்கள்:

உங்கள் மொபைல் நம்பரில் 6 என்ற எண் இருந்தால் நீங்கள் பொதுவாக பொறுப்பான நபராக இருப்பீர்கள். குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லா இடத்திலும் நீங்கள் உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள், மற்றவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள் மற்றும் மற்றவர்களுடன் சுலபமாக பழகி விடுவீர்கள். அது மட்டுமல்லாமல், 6 என்பது ஜாலியாக, வேடிக்கையாக இருக்கும் மற்றும் ரிலாக்ஸாக இருக்கும் தன்மையையும் குறிக்கிறது. வீட்டில் இருப்பதை விட வெளியில் அதிக நேரம் செலவிட விருப்பம் அதிகமாக இருக்கும்.

அதுவே தவறான திசையில் உங்களை அழைத்துச் செல்லும் ஆபத்தும் இருக்கிறது. உங்களுக்கு பொருந்தாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத உறவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். 6 சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால், அழகாக, கவர்ச்சிகரமாக இருக்கும் பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில், நேர்த்தியாக வெளிக்காட்டுவதை விரும்புவீர்கள். கனவுகள் கற்பனைகள் இருந்தாலும் வாழ்க்கையில் நடைமுறையாக சிந்திப்பீர்கள். நல்ல வாய்ப்புகள், வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவை உங்களை தேடி வரும்.

மொபைல் எண்ணில் 6 ஒரு முறை இருந்தால்:

குடும்பம் மற்றும் உறவுகள் இடையே அன்பு பாசம் நேசம் ஆகியவை அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் திறன் மற்றும் அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். மொபைல் எண்ணில் 6 ஒருமுறை இருந்தால், நல்ல பெற்றோராக இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். மிகச் சிறந்த பெற்றோராக உங்கள் குழந்தைகளை வளர்ப்பீர்கள்.

உங்கள் மொபைல் எண்ணில் 6 இரண்டு முறை இருந்தால்:

உங்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். அதிகமாக கவலைப்படும் நபராக இருப்பீர்கள். எல்லாவற்றிலுமே கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவீர்கள். மற்றவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எப்பொழுதுமே இருக்கும். அழகு மற்றும் நல்ல தோற்றத்தால் ஈர்க்கப்படுவீர்கள். ஒரு பெற்றோராக குழந்தை பற்றி கவலை எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். எனவே இதுவே உங்களை அதிக பொறுப்புணர்வு கொண்டவராக, சுதந்திரமாக மற்றும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்படியான திறனைக் கொடுக்கும்.

உங்கள் மொபைல் எண்ணில் 6 மூன்று முறை இருந்தால்:

மொபைல் எண் சாதகம் இல்லாத ஒரு தன்மையை குறிக்கிறது. மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் சமூகத்தில் தன்னுடைய இமேஜூக்கு கலங்கம் வரக்கூடாது என்று தீவிரமாக பாதுகாப்பவர்களாக இருப்பீர்கள். தன் குடும்பம் கஷ்டப்படுவதை கண்டு கொள்ளாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிகமாக மெனக்கெடுவீர்கள். பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே நிறைந்திருக்கும் மற்றும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போகாமல் முரண்படுவீர்கள். ஆனால் சமூக சேவை என்று வரும் பொழுது எல்லா இடங்களிலும் நீங்கள் முன்னிலையில் இருப்பீர்கள்.

உங்கள் மொபைல் எண்ணில் 4 முறை அல்லது அதற்கும் மேல் இருந்தால்:

நீங்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருப்பீர்கள் அல்லது எதுவுமே செய்யாமல் எப்போதுமே சும்மா இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சனையாக மாறுவீர்கள். உங்களுடைய சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் இருக்கும். ஒரு நாளின் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாத அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டே எல்லாவற்றையும் குழப்பிக் கொள்வீர்கள். உங்களுடைய இந்த தன்மை மற்றவர்களுக்கு கிடைப்பதை கூட பாதித்து விடும்.

உங்கள் மொபைல் எண்ணில் 6 இல்லை என்றால்:

நீங்கள் உங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் அதிலிருந்து விலகிப்போவீர்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவீர்கள். எனவே மிக நல்ல வாய்ப்புகளையெல்லாம் நீங்கள் தவற விடுவீர்கள். பலருக்கும் கிடைக்காத அரிதான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் கூட அதை அதை செய்வதில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்வீர்கள் மற்றும் தடைகள் ஏற்படும். எனவே உங்களால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாது. 6 எண் இல்லாத பொழுது இதை செய்தாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.

மொபைல் எண்ணின் கூட்டுத் தொகை 6 என்று இருந்தால்:

ஒரு நபருக்கு தேவையான அனைத்து விதமான மகிழ்ச்சி, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றை கொடுத்து, பொறுப்புள்ள நபராக மாற்றும். உங்கள் மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை ஆறாக இருக்கும்பொழுது மிகச்சிறந்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதே நேரத்தில் சொகுசான, வசதியான விஷயங்களுக்கு பழகிப் போன பிறகு கடின உழைப்பு மீது கவனம் செல்வது குறைய்ஹும். எனவே நீங்கள் வீட்டிலேயே இருந்து வீட்டுக்கு தேவையான விஷயங்களை கவனித்துக் கொள்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மொபைல் நியூமராலாஜி

Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 4 ஆக இருக்கிறதா.? அப்போ இந்த குணாதிசயங்கள் நிச்சயம் இருக்கும்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 5 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!

Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!

First published:

Tags: Numerology, Tamil News